அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 20 | Words Related to Computer and Technology


ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்கும்,  ஆங்கில சொற்களை அதிகளவில் தெரிந்துவைத்திருப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

எந்தவொரு மொழியிலும் சொற்களே அடிப்படையாக உள்ளன. சொற்களை வைத்தே வாக்கியம் அமைக்கிறோம். சொற்களை வைத்தே ஒருவர் என்ன சொல்கிறார் என்பதையும் புரிந்துகொள்கிறோம். அது மட்டுமா தவறான புரிதலுடன் ஒரு சொல்லை பிரயோகித்தால் வழக்குகள் கூட தோற்றுப்போய்விடுமாம்.

ஆங்கிலத்தில் 100-200 சொற்கள் தெரிந்த ஒருவரை விட 500-1,000 சொற்கள் தெரிந்த ஒருவர் இன்னும் விரிவாகவும், சரளமாகவும் பேச முடியும். சில வேளைகளில் ஒரு வாக்கியத்திலுள்ள ஒரு சொல்லின் அர்த்தம் புரியவில்லை எனின் அந்த முழு வாக்கியத்தின் கருத்தும் புரியாமல் போய்விடும். இதனால் தான் ஆங்கிலம் கற்க, ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் அதிகளவில் புதிய ஆங்கில சொற்களை தேடி கற்க வேண்டும்.

புதிய சொற்களை அறிந்துகொள்ள தினமும் ஆங்கிலத்தில் ஒரு பந்தியையேனும் வாசிப்பதை பழக்கத்தில் கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் ஆங்கில நாளிதழ்களையோ அல்லது ஆங்கில செய்தி இணையதளங்களையோ பார்வையிடுவதை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

இங்கே கணினி மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய அன்றாட வாழ்வில் அல்லது உங்கள் அலுவலகத்தில் நீங்கள் கேள்வியுறும் சில ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Memory - நினைவகம்
Restart - மீள்தொடக்கம்
Backup - காப்புப் பிரதி
Data - தரவு
Control - கட்டுப்பாடு
Control Panel - கட்டுப்பட்டுப் பலகை
Create - உருவாக்கு
Communication - தொடர்பாடல்
Computerization - கணினிமயமாக்கல்
Activate - செயல்படுத்து
Browser - உலாவி
Close - மூடு
Open - திற
Delete - அழி
Authentication - உறுதிப்பாடு
App - செயலி
Administrator - நிர்வாகி
Animation - இயக்கமூட்டல்
Capacity - கொள்திறன்
Automatic - தன்னியக்க
Device - கருவி
Archive - காப்பகம்
Boot - துவக்கு
Activity - செயல்பாடு
Background - பின்னணி
Appearance - தோற்றம்

இது போன்ற பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.
Previous Post Next Post