ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 105


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் சரளமாகக் கதைக்க வேண்டுமெனில் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுக்க வேண்டும். இங்கே தரப்படும் வாக்கியங்களையும் நீங்கள் அதற்காக பயன்படுத்த முடியும்.

இவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Go straight
நேராக செல்லுங்கள்

Don't go straight
நேராக செல்ல வேண்டாம்

Go left
இடதுபுறம் செல்லுங்கள்

Don't go left
இடதுபுறம் செல்ல வேண்டாம்

Go right
வலதுபுறம் செல்லுங்கள்

Don't go right
வலதுபுறம் செல்ல வேண்டாம்

Turn left
இடதுபுறம் திரும்புங்கள்

Don't turn left
இடதுபுறம் திரும்ப வேண்டாம்

Turn right
வலதுபுறம் திரும்புங்கள்

Don't turn right
வலதுபுறம் திரும்ப வேண்டாம்

Wait for me
எனக்காக காத்திருங்கள்

Don't wait for me
எனக்காக காத்திருக்க வேண்டாம்

They call him a robber.
அவர்கள் அவனை ஒரு திருடன் என்று அழைக்கிறார்கள்.

Do they call him a robber?
அவர்கள் அவனை ஒரு திருடன் என்று அழைக்கிறார்களா?

They don't call him a robber.
அவர்கள் அவனை ஒரு திருடன் என்று அழைப்பதில்லை.

Don't they call him a robber.
அவர்கள் அவனை ஒரு திருடன் என்று அழைப்பதில்லையா?

You should focus more on your education.
நீங்கள் உங்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Should I focus on my education?
நான் எனது கல்வியில் கவனம் செலுத்த வேண்டுமா?

You should not focus on other things.
நீங்கள் மற்றைய விடயங்களில் கவனம் செலுத்தக்கூடாது.

Shouldn't I focus on sports?
நான் விளையாட்டில் கவனம் செலுத்தக்கூடாதா?


He gave priority for sports.
அவன் விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தான்.

Did he give priority for sports?
அவன் விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தானா?

He didn't give priority for education.
அவன் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.

Didn't he give priority for education?
அவன் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கவில்லையா?

You have neglected my ideas.
நீங்கள் எனது யோசனைகளை புறக்கணித்துள்ளீர்கள்.

Have I neglected your ideas?
நான் உங்கள் யோசனைகளை புறக்கணித்துள்ளேனா?

I have not neglected your ideas.
நான் உங்கள் யோசனைகளை புறக்கணித்ததில்லை.

Haven't you neglected my ideas?
நீங்கள் எனது யோசனைகளை புறக்கணித்ததில்லையா?

I have done that before.
நான் அதை முன்னர் செய்துள்ளேன்.

Have you done that before?
நீங்கள் அதை முன்னர் செய்துள்ளீர்களா?

I haven't done that before.
நான் அதை முன்னர் செய்ததில்லை.

Haven't you done that before?
நீங்கள் அதை முன்னர் செய்ததில்லையா?
Previous Post Next Post