ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 108


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் போது பயன்படக்கூடிய சில வாக்கியங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Willingness
விருப்பம்

Unwillingness
விருப்பமின்மை

Spend your time.
உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.

Spend your money.
உங்கள் பணத்தை செலவிடுங்கள்.

Don't waste time.
நேரத்தை வீணாக்காதீர்கள்.

Don't waste money.
பணத்தை வீணாக்காதீர்கள்.

He will find you.
அவன் உங்களைக் கண்டுபிடிப்பான்.

Will he find me?
அவன் என்னைக் கண்டுபிடிப்பானா?

He won't find me.
அவன் என்னைக் கண்டுபிடிக்க மாட்டான்.

Won't he find you?
அவன் என்னைக் கண்டுபிடிக்க மாட்டானா?

You can cheat anyone.
நீங்கள் யாரையும் ஏமாற்ற முடியும்.

But, you can't cheat me.
ஆனால், நீங்கள் என்னை ஏமாற்ற முடியாது.

You cheated many people.
நீங்கள் பலரை ஏமாற்றினீர்கள்.

Did you cheat him?
நீங்கள் அவனைஏமாற்றினீர்களா?

Don't cheat anyone.
யாரையும் ஏமாற்ற வேண்டாம்.


Are you going to help me?
நீங்கள் எனக்கு உதவப் போகிறீர்களா?

I am not going to help you.
நான் உங்களுக்கு உதவப் போவதில்லை.

Who is going to help you?
உங்களுக்கு யார் உதவப் போகிறார்?

Nobody is going to help you.
யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை.

You said something.
நீங்கள் ஏதோ சொன்னீர்கள்.

Did you say anything?
நீங்கள் ஏதாவது சொன்னீர்களா?

I didn't say anything.
நான் எதுவும் சொல்லவில்லை.

Didn't you say anything?
நீங்கள் எதுவும் சொல்லவில்லையா?

I sent him to do a job.
நான் அவரை ஒரு வேலையை செய்ய அனுப்பினேன்.

Did you send him to do a job?
நீங்கள் அவரை ஒரு வேலையை செய்ய அனுப்பினீர்களா?

I didn't send him to do any job.
நான் அவரை எந்த வேலையையும் செய்ய அனுப்பவில்லை.

Didn't you send him to do any job?
நீங்கள் அவரை எந்த வேலையையும் செய்ய அனுப்பவில்லையா?
Previous Post Next Post