ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 110


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே தரப்படும் ஆங்கில வாக்கியங்கள் மற்றும் சொற்றொடர்களில் பெரும்பாலானவை ஆங்கில உரையாடல்கள், திரைப்படங்களில் இடம்பெறும் உரையாடல்கள் மற்றும் உலக பிரபலங்களின் காணொளிகளில் இருந்து பெறப்பட்டவையாகும்.

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Put down
கீழே போடுங்கள்

Put here
இங்கே போடுங்கள்

Push up
மேலே தள்ளுங்கள்

Push down
கீழே தள்ளுங்கள்

Pull out
வெளியே இழுங்கள்

Bring down
வீழ்த்துங்கள் / தாழ்த்துங்கள்

I know what he wants.
அவனுக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

Do you know what he wants?
அவனுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?

I don't know what he wants. 
அவனுக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியாது.

Don't you know what he wants?
அவனுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?

Change your plans.
உங்கள் திட்டங்களை மாற்றுங்கள்.

Don't change your plans.
உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டாம்.

You should change your plans.
நீங்கள் உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டும்.

Should I change my plans?
நான் எனது திட்டங்களை மாற்ற வேண்டுமா?

You shouldn't change your plans.
நீங்கள் உங்கள் திட்டங்களை மாற்றக் கூடாது.


She did that without his help.
அவனது உதவியின்றி அவள் அதை செய்தாள்.

She could do that without his help.
அவனது உதவியின்றி அவளால் அதை செய்ய முடிந்தது.

Could she do that without his help?
அவனது உதவியின்றி அவளால் அதை செய்ய முடிந்ததா?

She couldn't do that without his help.
அவனது உதவியின்றி அவளால் அதை செய்ய முடியவில்லை.

They blame us.
அவர்கள் எங்களை குறை கூறுகிறார்கள்.

Do they blame us?
அவர்கள் எங்களை குறை கூறுகிறார்களா?

They don't blame us.
அவர்கள் எங்களை குறை கூறுவதில்லை.

Don't they blame us?
அவர்கள் எங்களை குறை கூறுவதில்லையா?

What are you going to do now?
நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

I know what to do.
என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்.

I don't know what to do.
என்ன செய்வது என்று எனக்குத் தெரியாது.

Do you know what to do? 
என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா?

I am not going to do anything.
நான் எதுவும் செய்யப் போவதில்லை.
Previous Post Next Post