ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 111


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் அதற்காக பயிற்சி எடுக்க வேண்டும், புதிய சொற்களையும், வாக்கிய அமைப்புக்களையும் தேடிக் கற்க வேண்டும்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ள. இவற்றை நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Who knows?
யாருக்குத் தெரியும்?

Everybody knows.
எல்லோருக்கும் தெரியும்.

Nobody knows.
யாருக்கும் தெரியாது.

Who else knows this?
இது வேறு யாருக்குத் தெரியும்?

Even your friends know this.
உங்கள் நண்பர்களுக்குக் கூட இது தெரியும்.

I don't know this.
இது எனக்குத் தெரியாது.

We stayed there.
நாங்கள் அங்கே தங்கினோம்.

Did you stay there?
நீங்கள் அங்கே தங்கினீர்களா?

We didn't stay there.
நாங்கள் அங்கே தங்கவில்லை.

Didn't you stay there?
நீங்கள் அங்கே தங்கவில்லையா?

What is the solution to this problem?
இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு?

There is no solution to this problem.
இந்த பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இல்லை.

We can find a solution.
எங்களால் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியும்.

Can we find a solution?
எங்களால் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியுமா?

We can't find a solution.
எங்களால் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது.

Can't we find a solution?
எங்களால் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியாதா?


Where were you?
நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

I was in my room.
நான் எனது அறையில் இருந்தேன்.

Were you in your room?
நீங்கள் உங்கள் அறையில் இருந்தீர்களா?

You were not in your room.
நீங்கள் உங்கள் அறையில் இருக்கவில்லை.

How do you know that?
அது உங்களுக்கு எப்படித் தெரியும்?

She went out.
அவள் வெளியே சென்றாள்.

Did she go out?
அவள் வெளியே சென்றாளா?

She didn't go out.
அவள் வெளியே செல்லவில்லை.

Didn't she go out?
அவள் வெளியே செல்லவில்லையா?

We have to go there.
நாங்கள் அங்கு செல்ல வேண்டி உள்ளது.

Do we really have to go there?
நாங்கள் உண்மையில் அங்கு செல்ல வேண்டி உள்ளதா?

We don't have to go there.
நாங்கள் அங்கு செல்ல வேண்டி இல்லை.

Don't we have to go there?
நாங்கள் அங்கு செல்ல வேண்டி இல்லையா?
Previous Post Next Post