ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 113


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ள. இவற்றை நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Get out
வெளியே செல்லுங்கள்

Come out
வெளியில் வாருங்கள்

Come in
உள்ளே வாருங்கள்

Come here
இங்கே வாருங்கள்

Come fast
வேகமாக வாருங்கள்

Come soon
சீக்கிரம் வாருங்கள்

Come quick
விரைவாக வாருங்கள்

They denied that.
அவர்கள் அதை மறுத்தார்கள்.

Did they deny that?
அவர்கள் அதை மறுத்தார்களா?

They didn't deny that.
அவர்கள் அதை மறுக்கவில்லை.

Didn't they deny that?
அவர்கள் அதை மறுக்கவில்லையா?

They are looking for you.
அவர்கள் உங்களைத் தேடுகிறார்கள்.

Are they looking for me?
அவர்கள் என்னைத் தேடுகிறார்களா?

Why are they looking for me?
அவர்கள் ஏன் என்னைத் தேடுகிறார்கள்?

They are not looking for you.
அவர்கள் உங்களைத் தேடுவதில்லை.

Aren't they looking for me?
அவர்கள் என்னைத் தேடுவதில்லையா?


We are trying to find out.
நங்கள் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறோம்.

Are you trying to find out?
நீங்கள் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறீர்களா?

We are not trying to find out.
நங்கள் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டு இல்லை.

Aren't you trying to find out?
நீங்கள் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டு இல்லையா?

She should confirm that.
அவள் அதை உறுதிப்படுத்த வேண்டும்.

Should she confirm that?
அவள் அதை உறுதிப்படுத்த வேண்டுமா?

She shouldn't confirm that.
அவள் அதை உறுதிப்படுத்தக்கூடாது.

Shouldn't she confirm that?
அவள் அதை உறுதிப்படுத்தக்கூடாதா?

You can trust my friends.
நீங்கள் எனது நண்பர்களை நம்ப முடியும்.

Can we trust your friends?
நாங்கள் உங்கள் நண்பர்களை நம்ப முடியுமா?

We can't trust your friends.
எங்களால் உங்கள் நண்பர்களை நம்ப முடியாது.

Can't you trust my friends?
உங்களால் எனது நண்பர்களை நம்ப முடியாதா?
Previous Post Next Post