ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 118


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில சொற்றொடர்களும், வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


In danger
ஆபத்தில்

In future
எதிர்காலத்தில்

In fact
உண்மையில்

In general
பொதுவாக

At night
இரவில்

At sight
பார்வையில்

At least
குறைந்தபட்சம்

I heard what you said.
நீங்கள் சொன்னதை நான் கேட்டேன்.

Did you hear what I said?
நான் சொன்னது உங்களுக்குக் கேட்டதா?

I didn't hear what you said.
நீங்கள் சொன்னது எனக்குக் கேட்கவில்லை.

Didn't you hear what I said?
நான் சொன்னது உங்களுக்குக் கேட்கவில்லையா?

We believe them.
நாங்கள் அவர்களை நம்புகிறோம்.

Do you believe them?
நீங்கள் அவர்களை நம்புகிறீர்களா?

We don't believe them.
நாங்கள் அவர்களை நம்புவதில்லை.

Don't you believe them?
நீங்கள் அவர்களை நம்புவதில்லையா?


That is my problem.
அது என்னுடைய பிரச்சினை.

Is that your problem?
அது உங்களுடைய பிரச்சினையா?

That is not my problem.
அது என்னுடைய பிரச்சினை அல்ல.

Isn't that your problem?
அது உங்களுடைய பிரச்சினை அல்லவா?

He told me this matter.
அவர் இந்த விடயத்தை என்னிடம் கூறினார்.

Did he tell you this matter?
அவர் இந்த விடயத்தை உங்களிடம் கூறினாரா?

He didn't tell me this matter.
அவர் இந்த விடயத்தை என்னிடம் கூறவில்லை.

Didn't he tell you this matter?
அவர் இந்த விடயத்தை உங்களிடம் கூறவில்லையா?

She knows that this is her fault.
இது அவளுடைய தவறு என்று அவளுக்குத் தெரியும்.

Does she know that this is her fault?
இது அவளுடைய தவறு என்று அவளுக்குத் தெரியுமா?

She doesn't know that this is her fault.
இது அவளுடைய தவறு என்று அவளுக்குத் தெரியாது.

Doesn't she know that this is her fault?
இது அவளுடைய தவறு என்று அவளுக்குத் தெரியாதா?
Previous Post Next Post