ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 123


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை இலகுவாக்கும் நோக்கில் இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பட பயன்படுத்த முடியும்.

இங்கே அவ்வாறான சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Right now
இப்போதே

Right there
அங்கேயே

Right here
இங்கேயே

Come right now
இப்போதே வாருங்கள்

Stay right there
அங்கேயே இருங்கள்

That is my fault.
அது என் தவறு.

Is that my fault?
அது என் தவறா?

That is not my fault.
அது என் தவறல்ல.

Isn't that my fault?
அது என் தவறல்லவா?

He did it purposely.
அவன் அதை வேண்டுமென்றே செய்தான்.

Did he do it purposely?
அவன் அதை வேண்டுமென்றே செய்தானா?

He didn't do it purposely.
அவன் அதை வேண்டுமென்றே செய்யவில்லை.

Didn't he do it purposely?
அவன் அதை வேண்டுமென்றே செய்யவில்லையா?


They will blame us.
அவர்கள் எங்களை குறை கூறுவார்கள்.

Will they blame us?
அவர்கள் எங்களை குறை கூறுவார்களா?

They won't blame us.
அவர்கள் எங்களை குறை கூறமாட்டார்கள்.

Won't they blame us?
அவர்கள் எங்களை குறை கூறமாட்டார்களா?

You should work hard.
நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

Should you work hard?
நீங்கள் கடினமாக உழைக்க வேண்டுமா?

You shouldn't work hard.
நீங்கள் கடினமாக உழைக்கக்கூடாது.

Shouldn't you work hard?
நீங்கள் கடினமாக உழைக்கக்கூடாதா?

She will wait until I come.
நான் வரும் வரை அவள் காத்திருப்பாள்.

Will she wait until I come?
நான் வரும் வரை அவள் காத்திருப்பாளா?

She won't wait until I come.
நான் வரும் வரை அவள் காத்திருக்க மாட்டாள்.

Won't she wait until I come?
நான் வரும் வரை அவள் காத்திருக்க மாட்டாளா?
Previous Post Next Post