ஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 137 (Take - எடு)


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே Take (எடு) எனும் சொல்லை வைத்து கதைக்கப்படும் சில வாக்கியங்களும் அவற்றின் தமிழ் கருத்தும் தரப்பட்டுள்ளது.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Take action.
நடவடிக்கை எடுங்கள்.

Take a bath.
குளியுங்கள்.

Take a little break.
சிறிது ஓய்வெடுங்கள்.

Take a short nap.
சற்று தூங்குங்கள்.

Take a photo.
புகைப்படம் ஒன்று எடுங்கள்.

Take some time.
சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

Take your time.
போதியளவு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

Take off your hat.
உங்கள் தொப்பியை கழற்றுங்கள்.

Take off your shoes.
உங்கள் காலணிகளை கழற்றுங்கள்.

Take off your shirt.
உங்கள் சட்டையை கழற்றுங்கள்.

Don't take my phone.
எனது கையடக்கத் தொலைபேசியை எடுக்க வேண்டாம்.

Don't take my books.
எனது புத்தகங்களை எடுக்க வேண்டாம்.

Don't take my car key.
எனது கார் சாவியை எடுக்க வேண்டாம்.

How long it will take?
அதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

It will take one hour.
அதற்கு ஒரு மணி நேரம் ஆகும்.

I take your side.
நான் உங்கள் பக்கத்தை எடுத்துக்கொள்கிறேன்.

Do you take my side?
நீங்கள் எனது பக்கத்தை எடுத்துக்கொள்கிறீர்களா?

I don't take your side.
நான் உங்கள் பக்கத்தை எடுத்துக்கொள்வதில்லை.

Don't you take my side?
நீங்கள் எனது பக்கத்தை எடுத்துக்கொள்வதில்லையா?


I can take care of him.
என்னால் அவரைக் கவனித்துக் கொள்ள முடியும்.

Can you take care of him?
உங்களால் அவரைக் கவனித்துக் கொள்ள முடியுமா?

I can't take care of him.
என்னால் அவரைக் கவனித்துக் கொள்ள முடியாது.

Can't you take care of him?
உங்களால் அவரைக் கவனித்துக் கொள்ள முடியாதா?

He took me to the hospital.
அவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

Did he take you to the hospital?
அவர் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாரா?

He didn't take me to the hospital.
அவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.

Didn't he take you to the hospital?
அவர் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லையா?

You should take your medicines.
நீங்கள் உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Should you take your medicines?
நீங்கள் உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா?

You shouldn't take your medicines.
நீங்கள் உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

Shouldn't you take your medicines?
நீங்கள் உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாதா?
Previous Post Next Post