ஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 138 (Give - கொடுங்கள்)


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே Give (கொடுங்கள்) எனும் சொல்லை வைத்து கதைக்கப்படும் சில வாக்கியங்களும் அவற்றின் தமிழ் கருத்தும் தரப்பட்டுள்ளது.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

Give எனும் சொல் ஆங்கிலத்தில் கொடுங்கள் அல்லது தாருங்கள் என்பதைக் குறிக்கும்.


Give it to me.
அதை என்னிடம் கொடுங்கள்.

Give it to him.
அதை அவரிடம் கொடுங்கள்.

Give it to her.
அதை அவளிடம் கொடுங்கள்.

Give it to them.
அதை அவர்களிடம் கொடுங்கள்.

Don't give it to me.
அதை என்னிடம் கொடுக்க வேண்டாம்.

Don't give it to him.
அதை அவரிடம் கொடுக்க வேண்டாம்.

Don't give it to them.
அதை அவர்களிடம் கொடுக்க வேண்டாம்.

Give me a call.
எனக்கு ஒரு அழைப்புத் தாருங்கள்.

Give me a message.
எனக்கு ஒரு செய்தி தாருங்கள்.

Give me a pen.
எனக்கு ஒரு பேனா கொடுங்கள்.

Give her some money.
அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள்.

Give me some time.
எனக்கு சிறிது நேரம் தாருங்கள்.

Give me the book.
என்னிடம் புத்தகத்தை கொடுங்கள்.

Give him the key.
அவனிடம் சாவியை கொடுங்கள்.

I will give you some food.
நான் உங்களுக்கு கொஞ்சம் உணவு தருவேன்.

Will you give me some food?
எனக்கு நீங்கள் கொஞ்சம் உணவு தருவீர்களா?

I won't give you food.
நான் உங்களுக்கு உணவு தரமாட்டேன்.

Won't you give me some food?
நீங்கள் எனக்குக் கொஞ்சம் உணவு தரமாட்டீர்களா?


You should give it a try.
நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டும்.

Should I give it a try?
நான் அதை முயற்சி செய்ய வேண்டுமா?

You shouldn't give it a try?
நீங்கள் அதை முயற்சி செய்யக்கூடாது.

Why don't you give it a try?
நீங்கள் ஏன் அதை முயற்சி செய்வதில்லை?

Give up - விட்டுவிடுதல் / கைவிடுதல்

I will give up that idea.
நான் அந்த யோசனையை கைவிடுவேன்.

I won't give up that idea.
நான் அந்த யோசனையை கைவிடமாட்டேன்.

Did you give up that idea?
நீங்கள் அந்த யோசனையை கைவிட்டீர்களா?

Why did you give up that?
நீங்கள் ஏன் அதை கைவிட்டீர்கள்?

He gave up smoking.
அவன் புகைப்பதை கைவிட்டான்.

Did he give up smoking?
அவன் புகைப்பதை கைவிட்டானா?

He didn't give up smoking.
அவன் புகைப்பதை கைவிடவில்லை.

Didn't he give up smoking?
அவன் புகைப்பதை கைவிடவில்லையா?
Previous Post Next Post