ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 130

'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்கப் பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். ஆங்கிலம் கற்பதோடு, ஆங்கிலத்தில் கதைக்கவும் சற்று நேரம் ஒதுக்க வேண்டும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


They sacrificed their lives.
அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.

Did they sacrifice their lives?
அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்களா?

Why did they sacrifice their lives?
அவர்கள் ஏன் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்?

They didn't sacrifice their lives.
அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவில்லை.

Didn't they sacrifice their lives?
அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவில்லையா?

We are ready to go there.
நாங்கள் அங்கு செல்ல தயாராக இருக்கிறோம்.

Are we ready to go there?
நாங்கள் அங்கு செல்லத் தயாராக இருக்கிறோமா?

We are not ready to go there.
நாங்கள் அங்கு செல்லத் தயாராக இல்லை.

Aren't we ready to go there?
நாங்கள் அங்கு செல்லத் தயாராக இல்லையா?

The government postponed the election.
அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்தது.

Did the government postpone the election?
அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்ததா?

The government did not postpone the election.
அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கவில்லை.

Didn't the government postpone the election?
அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கவில்லையா?


He can implement his plans.
அவனால் அவனது திட்டங்களை செயல்படுத்த முடியும்.

Can he implement his plans?
அவனால் அவனது திட்டங்களை செயல்படுத்த முடியுமா?

He can't implement his plans.
அவனால் அவனது திட்டங்களை செயல்படுத்த முடியாது.

Can't he implement his plans?
அவனால் அவனது திட்டங்களை செயல்படுத்த முடியாதா?

When will she come?
அவள் எப்போது வருவாள்?

She will come in the evening.
அவள் மாலையில் வருவாள்.

Will she come in the evening?
அவள் மாலையில் வருவாளா?

She won't come in the evening.
அவள் மாலையில் வரமாட்டாள்.

Won't she come in the evening?
அவள் மாலையில் வரமாட்டாளா?
Previous Post Next Post