ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 133


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும் அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Do what I say.
நான் சொல்வதைச் செய்யுங்கள்.

Do what he says.
அவர் சொல்வதைச் செய்யுங்கள்.

Don't do what he says.
அவர் சொல்வதைச் செய்ய வேண்டாம்.

Don't do what others say.
மற்றவர்கள் சொல்வதைச் செய்ய வேண்டாம்.

Can you do what I say?
நான் சொல்வதை உங்களால் செய்ய முடியுமா?

You can't do what others say.
மற்றவர்கள் சொல்வதை உங்களால் செய்ய முடியாது.

There is a witness.
ஒரு சாட்சி இருக்கிறது.

Is there a witness?
ஒரு சாட்சிஇருக்கிறதா?

There is no witness.
சாட்சிகள் ஒன்றும் இல்லை.

Isn't there a witness?
சாட்சிகள் ஒன்றும் இல்லையா?

We are talking about your friends.
நாங்கள் உங்கள் நண்பர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

Are we talking about your friends?
நாங்கள் உங்கள் நண்பர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோமா?

We are not talking about your friends.
நாங்கள் உங்கள் நண்பர்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில்லை.

Aren't we talking about your friends?
நாங்கள் உங்கள் நண்பர்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில்லையா?

That is my problem.
அது எனது பிரச்சினை.

Is that my problem?
அது எனது பிரச்சினையா?

That is not my problem.
அது எனது பிரச்சினையல்ல.

Isn't that my problem?
அது எனது பிரச்சினையல்லவா?

I remember your name.
உங்கள் பெயர் எனக்கு நினைவிருக்கிறது.

Do you remember my name?
என் பெயர் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

I don't remember your name.
உங்கள் பெயர் எனக்கு நினைவில்லை.

Don't you remember my name?
என் பெயர் உங்களுக்கு நினைவில்லையா?

You have to go home now.
நீங்கள் தற்போது வீட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது.

Do you have to go home now?
நீங்கள் தற்போது வீட்டிற்கு செல்ல வேண்டி உள்ளதா?

You don't have to go home now.
நீங்கள் தற்போது வீட்டிற்கு செல்ல வேண்டி இல்லை.

Don't you have to go home now?
நீங்கள் தற்போது வீட்டிற்கு செல்ல வேண்டி இல்லையா?
Previous Post Next Post