ஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 140 (Read - வாசியுங்கள்)


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே Read (வாசியுங்கள்) எனும் ஆங்கில சொல்லை வைத்து கதைக்கப்படும் சில வாக்கியங்களும் அவற்றின் தமிழ் கருத்தும் தரப்பட்டுள்ளன.
 
இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

Read எனும் ஆங்கிலச் சொல் தமிழில் வாசியுங்கள் என்பதைக் குறிக்கும். சிலவேளைகளில் வாசித்தலை தமிழில் என்றால் படி / படியுங்கள் என்றும் கூறுவார்கள். 


Read எனும் சொல்லின் இறந்த காலமும் Read என்றே எழுதப்படும், ஆனால் வாசிக்கும் போது நிகழ்காலம் Read (ரீட்) எனவும், இறந்த காலம் Read (ரெட்) எனவும் வாசிக்கப்படும்.


I like to read that book.
நான் அந்த புத்தகத்தைப் வாசிக்க விரும்புகிறேன்.

Do you like to read that book?
நீங்கள் அந்த புத்தகத்தைப் வாசிக்க விரும்புகிறீர்களா?

I don't like to read that book.
நான் அந்த புத்தகத்தைப் வாசிக்க விரும்புவதில்லை.

Don't you like to read that book?
நீங்கள் அந்த புத்தகத்தைப் வாசிக்க விரும்புவதில்லையா?

You can read this letter.
உங்களால் இந்தக் கடிதத்தை வாசிக்க முடியும்.

Can you read this letter?
உங்களால் இந்தக் கடிதத்தை வாசிக்க முடியுமா?

You can't read this letter.
உங்களால் இந்தக் கடிதத்தை வாசிக்க முடியாது.

Can't you read this letter?
உங்களால் இந்தக் கடிதத்தை வாசிக்க முடியாதா?

I read about it.
நான் அதைப் பற்றிப் படித்தேன்.

Did you read about it?
நீங்கள் அதைப் பற்றி படித்தீர்களா?

I didn't read about it.
நான் அதைப் பற்றிப் படிக்கவில்லை.

Didn't you read about it?
நீங்கள் அதைப் பற்றி படிக்கவில்லையா?


He has to read the story first.
அவர் முதலில் கதையைப் படிக்க வேண்டியுள்ளது.

Does he have to read the story?
அவர் கதையைப் படிக்க வேண்டியுள்ளதா?

He doesn't have to read the story.
அவர் கதையைப் படிக்க வேண்டி இல்லை.

When did he read the story?
அவர் எப்போது கதையைப் படித்தார்?

You should read this note.
நீங்கள் இந்தக் குறிப்பை வாசிக்க வேண்டும்.

Should you read this note.
நீங்கள் இந்தக் குறிப்பை வாசிக்க வேண்டுமா?

You shouldn't read this note.
நீங்கள் இந்தக் குறிப்பை வாசிக்கக் கூடாது.

Shouldn't you read this note?
நீங்கள் இந்தக் குறிப்பை வாசிக்கக் கூடாதா?
Previous Post Next Post