ஆங்கிலத்தில் பேசுவோம் - பகுதி 142 (Ask - கேளுங்கள், வினவுங்கள்)


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே Ask எனும் ஆங்கில சொல்லை வைத்து கதைக்கப்படும் சில வாக்கியங்களும் அவற்றின் தமிழ் கருத்தும் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

Ask எனும் ஆங்கிலச் சொல் தமிழில் கேளுங்கள் அல்லது வினவுங்கள் என அர்த்தம் தரும்.

நிகழ்காலம் - பன்மை Ask, ஒருமை Asks
இறந்தகாலம் - Asked
எதிர்காலம் - Will ask


Ask now.
இப்போது கேளுங்கள்.

Ask later.
பின்னர் கேளுங்கள்.

Ask me now.
இப்போது என்னிடம் கேளுங்கள்.

Ask him soon.
விரைவில் அவரிடம் கேளுங்கள்.

Ask them today.
இன்று அவர்களிடம் கேளுங்கள்.

Ask her next time.
அடுத்த முறை அவளிடம் கேளுங்கள்.

He asked about my job.
அவர் என் தொழிலைப் பற்றிக் கேட்டார்.

Did he ask about your job?
அவர் உங்கள் தொழிலைப் பற்றிக் கேட்டாரா?

He didn't ask about my job.
அவர் என் தொழிலைப் பற்றிக் கேட்கவில்லை.

Didn't he ask about your job?
அவர் உங்கள் தொழிலைப் பற்றிக் கேட்கவில்லையா?

Who will ask you?
யார் உங்களிடம் கேட்பார்கள்?

They will ask me.
அவர்கள் என்னிடம் கேட்பார்கள்.

Will they ask you?
அவர்கள் உங்களிடம் கேட்பார்களா?

Why will they ask you?
அவர்கள் ஏன் உங்களிடம் கேட்பார்கள்?

When will they ask you?
அவர்கள் எப்போது உங்களிடம் கேட்பார்கள்?

They won't ask me.
அவர்கள் என்னிடம் கேட்கமாட்டார்கள்.

Won't they ask you?
அவர்கள் உங்களிடம் கேட்கமாட்டார்களா?


You have to ask him that matter.
நீங்கள் அந்த விடயத்தை அவரிடம் கேட்க வேண்டியுள்ளது.

Do you have to ask him that matter?
நீங்கள் அந்த விடயத்தை அவரிடம் கேட்க வேண்டியுள்ளதா?

You don't have to ask him that matter.
நீங்கள் அந்த விடயத்தை அவரிடம் கேட்க வேண்டி இல்லை.

Don't you have to ask him that matter?
நீங்கள் அந்த விடயத்தை அவரிடம் கேட்க வேண்டி இல்லையா?

She should ask the reason.
அவள் காரணத்தைக் கேட்க வேண்டும்.

Should she ask the reason?
அவள் காரணத்தைக் கேட்க வேண்டுமா?

She should not ask the reason.
அவள் காரணத்தைக் கேட்கக் கூடாது.

Shouldn't she ask the reason?
அவள் காரணத்தைக் கேட்கக் கூடாதா?

I can ask the manager.
என்னால் முகாமையாளரிடம் கேட்க முடியும்.

Can you ask the manager?
உங்களால் முகாமையாளரிடம் கேட்க முடியுமா?

I can't ask the manager.
என்னால் முகாமையாளரிடம் கேட்க முடியாது.

Can't you ask the manager?
உங்களால் முகாமையாளரிடம் கேட்க முடியாதா?

தொழில் செய்பவர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உற்பட பலருக்கும் இவ்வாறான பதிவுகள் கட்டாயம் உதவிபுரியும் என்பதால் இதனை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Previous Post Next Post