ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 146


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்படும் வாக்கியங்கள் நேர்மறை, கேள்வி, எதிர்மறை மற்றும் எதிர்மறை கேள்வி வாக்கியங்கள் என நீங்கள் அவற்றை உங்களுக்கு விரும்பிய வடிவில் பேசக்கூடியவாறு தரப்படுகின்றன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


He lost his job.
அவர் அவரது தொழிலை இழந்தார்.

Did he lose his job?
அவர் அவரது தொழிலை இழந்தாரா?

He didn't lose his job.
அவர் அவரது தொழிலை இழக்கவில்லை.

Didn't he lose his job?
அவர் அவரது தொழிலை இழக்கவில்லையா?

It is a simple matter.
அது ஒரு எளிய விடயம்.

Is it a simple matter?
அது ஒரு எளிய விடயமா?

It is not a simple matter.
அது ஒரு எளிய விடயமல்ல.

Isn't it a simple matter?
அது ஒரு எளிய விடயமல்லவா?

She decided to take this path.
அவள் இந்த வழியில் செல்ல முடிவு செய்தாள்.

Did she decide to take this path?
அவள் இந்த வழியில் செல்ல முடிவு செய்தாளா?

She didn't decide to take this path.
அவள் இந்த வழியில் செல்ல முடிவு செய்யவில்லை.

Didn't she decide to take this path?
அவள் இந்த வழியில் செல்ல முடிவு செய்யவில்லைய?


It is important to learn these subjects.
இந்த பாடங்களைக் கற்றுக்கொள்வது முக்கியமானது.

Is it important to learn these subjects?
இந்த பாடங்களைக் கற்றுக்கொள்வது முக்கியமானதா?

It is not important to learn these subjects.
இந்த பாடங்களைக் கற்றுக்கொள்வது முக்கியமில்லை.

Isn't it important to learn these subjects?
இந்த பாடங்களைக் கற்றுக்கொள்வது முக்கியமில்லையா?

We got the expected results.
நாங்கள் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைத்தன.

Did you get the expected results? 
நீங்கள் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைத்தனவா?

We didn't get the expected results.
நாங்கள் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை.

Didn't you get the expected results?
நீங்கள் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லையா?
Previous Post Next Post