ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 147


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் (Happiness) மகிழ்ச்சியை விவரிக்கப் பயன்படும் சொற்களும், அவற்றைக் கொண்டு பேசப்படும் சில முக்கிய ஆங்கில வாக்கியங்களையும் இங்கே பார்க்கலாம்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

01. Glad

I am glad to see you here today.
இன்று உங்களை இங்கு பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

I am glad to hear that.
அதைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

We were very glad about your new job.
உங்கள் புதிய தொழில் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.


02. Delighted

She was so delighted about your gift.
உங்கள் பரிசு குறித்து அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

I am delighted to meet you here.
இங்கே உங்களை சந்தித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

So delighted to see you.
உங்களைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி.


03. Cheerful

Very cheerful person.
மிகவும் மகிழ்ச்சியான நபர்.

He was cheerful as usual.
அவர் வழக்கம் போல் மகிழ்ச்சியாக இருந்தார்.

Cheerful people.
மகிழ்வான மக்கள்.

Cheerful moment.
மகிழ்ச்சியான தருணம்.


04. Thrilled

Thrill என்பது சிலிர்ப்பு அல்லது விறுவிறுப்பை விவரிக்கப் பயன்படும் சொல்லாகும். எனினும் சிலவேளைகளில் இந்த சொல் ஆங்கிலத்தில் மகிழ்ச்சியை விவரிக்கவும் பயன்படுகிறது.

I am thrilled with your achievement.
உங்கள் சாதனையால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
Previous Post Next Post