ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 148


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 


இங்கே தரப்படும் வாக்கியங்கள் நேர்மறை, கேள்வி, எதிர்மறை மற்றும் எதிர்மறை கேள்வி வாக்கியங்கள் என நீங்கள் அவற்றை உங்களுக்கு விரும்பிய வடிவில் பேசக்கூடியவாறு தரப்படுகின்றன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


How did you go?
நீங்கள் எப்படி சென்றீர்கள்?

How often did you go?
நீங்கள் எத்தனை முறை சென்றீர்கள்?

How far did you go?
நீங்கள் எவ்வளவு தூரம் சென்றீர்கள்?

How fast did you go?
நீங்கள் எவ்வளவு வேகமாக சென்றீர்கள்?

When did you go?
நீங்கள் எப்போது சென்றீர்கள்?

Where did you go?
நீங்கள் எங்கே சென்றீர்கள்?

Why did you go?
நீங்கள் ஏன் சென்றீர்கள்?

Take that now.
இப்போது அதை எடுங்கள்.

Don't take that now.
இப்போது அதை எடுக்க வேண்டாம்.

You have to take that now.
நீங்கள் இப்போது அதை எடுக்க வேண்டியுள்ளது.

You don't have to take that now.
நீங்கள் இப்போது அதை எடுக்க வேண்டியதில்லை.

Why didn't you take that?
நீங்கள் ஏன் அதை எடுக்கவில்லை?

Why should you take that?
நீங்கள் ஏன் அதை எடுக்க வேண்டும்?

You shouldn't take that now.
நீங்கள் இப்போது அதை எடுக்கக்கூடாது.


You should work today.
நீங்கள் இன்று வேலை செய்ய வேண்டும்.

Should I work today?
நான் இன்று வேலை செய்ய வேண்டுமா?

Why should I work today?
ஏன் இன்று நான் வேலை செய்ய வேண்டும்?

Why can't you work today?
ஏன் இன்று உங்களால் வேலை செய்ய முடியாது?

How can I work today?
என்னால் இன்று எவ்வாறு வேலை செய்ய முடியும்?

You shouldn't work today.
நீங்கள் இன்று வேலை செய்யக்கூடாது.

Shouldn't you work today?
இன்று நீங்கள் வேலை செய்யக்கூடாதா?

Can't you work today?
இன்று உங்களால் வேலை செய்ய முடியாதா?

When will you work?
நீங்கள் எப்போது வேலை செய்வீர்கள்?

There is a big problem.
ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது.

Is there a big problem?
ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறதா?

There is no problem.
எந்த பிரச்சினையும் இல்லை.

Isn't there any problem?
எந்த பிரச்சினையும் இல்லையா?
Previous Post Next Post