ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 151


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


What are you doing now?
நீங்கள் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?
I am doing nothing.
நான் எதுவும் செய்துகொண்டில்லை.

Can you say that again?
உங்களால் அதை மீண்டும் சொல்ல முடியுமா?
I can't say that again.
என்னால் அதை மீண்டும் சொல்ல முடியாது.

Have you ever gone abroad?
நீங்கள் எப்போதாவது வெளிநாடு சென்றிருக்கிறீர்களா?
I have visited many countries.
நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.

Do you know where you are going?
நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
I have never gone this way before.
நான் இதற்கு முன் இந்த வழியில் சென்றதில்லை.

Where does she live?
அவள் எங்கே வசிக்கிறாள்?
She lives in Canada.
அவள் கனடாவில் வசிக்கிறாள்.


Are you ready for that?
நீங்கள் அதற்கு தயாரா?
I am not ready for that.
நான் அதற்கு தயாராக இல்லை.

I am afraid it will rain.
மழை வருமோ என்று பயப்படுகிறேன்.
It will not rain today.
இன்று மழை பெய்யாது.

Let's sit over there.
அங்கே உட்காருவோம்.
We can't sit over there.
நாங்கள் அங்கே உட்கார முடியாது.

May I speak to you?
நான் உங்களிடம் பேசலாமா?
Yes, sure.
ஆம், கண்டிப்பாக.

Do you like this place?
உங்களுக்கு இந்த இடம் பிடிக்குமா?
I don't like this place.
எனக்கு இந்த இடம் பிடிக்கவில்லை.
Previous Post Next Post