New Admission - 2019 : இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகம் | SLIATE


உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தினால் (SLIATE) வழங்கப்படும் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஏன் நீங்கள் SLIATE இனை தேர்ந்தெடுக்க வேண்டும்?

இங்கே உயர்தரத்தில் நீங்கள் தேர்தெடுத்த துறைக்கு ஏற்ப நீங்கள் விரும்பிய கற்கைநெறிக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

முழு நேர மற்றும் பகுதி நேர அடிப்படையில் கற்கைநெறிகளுக்காக நீங்கள் இங்கே இணைந்துகொள்ள முடியும். முழுநேர கற்கைநெறிகள் பல்கலைக்கழங்களைப் போன்றே இலவசமாக வழங்கப்படுகின்றன. எனினும் பகுதி நேர கற்கைநெறிகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களை விட ஒப்பீட்டு அளவில் மிகவும் ஓர் சிறிய அளவிலான கட்டணம் அறவிடப்படுகிறது.

இங்கே வழங்கப்படும் கற்கைநெறிகள் மிகவும் தரம் வாய்ந்தவை என்பதால் இவற்றை வெற்றிகரமாக நிறைவுசெய்யுமிடத்து, குறித்த துறையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இலகுவாக தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள இக்கற்கைநெறிகள் பெரிதும் உதவிபுரிகின்றன.

மேலும், இங்கு வழங்கப்படும் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தால், குறித்த துறைக்கான பட்டப்படிப்பினை இலங்கை திறந்த பல்கலைக்கழகம் உற்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஓரிரு வருடங்களில் உங்களால் நிறைவுசெய்யவும் முடியும்.

கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 15.02.2019 ஆகும்.

இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவத்தினால் வழங்கப்படும் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளின் விபரம், விண்ணப்பப் படிவம் மற்றும் அணைத்து மேலதிக தகவல்களுக்கும் இங்கே அழுத்துங்கள்.

நீங்கள் இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவத்தில் ஏற்கனவே ஓர் கற்கைநெறியில்  இணைந்திருப்பின், உங்கள் தம்பி தங்கைகளுக்கு கீழே comment பகுதியில் அது பற்றிய மேலதிக தகவல்களை வழங்க முடியும்.
أحدث أقدم