பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்!


அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் 20 வரை விடுமுறையளிக்கப்பட்டதை தொடர்ந்து படசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் பணிகள் பற்றிய விஷேட அறிவித்தல்கள் சில வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை தவணை விடுமுறை முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தாலும், பின்வரும் விடயங்களை உரிய காலங்களில் நிறைவு செய்து கொள்வதனற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. மாணவர்களின் பல்கலைனக்கழக அனுமதி விண்ணப்பம்
2. தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம்
3. தேர்தல் பணி விண்ணப்பம்

Source - moe.gov.lk
Previous Post Next Post