Lesson 09 | Concrete Nouns (திடப் பெயர்ச்சொற்கள்), Abstract Nouns (நுண் பெயர்ச்சொற்கள்), Compound Nouns (கலவைப் பெயர்ச்சொற்கள்)


Concrete Nouns
திடப் பெயர்ச்சொற்கள்

திடப் பெயர்ச்சொற்கள் (Concrete Nouns) என்பவை கண்ணால் பார்த்தும், கையால் தொட்டும் உணரக்கூடியவையாகும். இவை ஏனைய பெயர்ச்சொற்களின் எதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளிலும் அடங்கலாம்.

உதாரணம்:

  • House - வீடு 
  • Road - பாதை
  • Cat - பூனை
  • Pen - பேனா
  • Bed - கட்டில்
  • Computer - கணினி
  • Crow - காகம்
  • Stone - கல்
  • Bus - பேரூந்து

Abstract Nouns
நுண் பெயர்ச்சொற்கள்

நுண் பெயர்ச்சொற்கள் (Abstract Nouns) என்பவை கண்களால் பார்க்கவோ தொட்டு உணரவோ முடியாத பெயர்ச்சொற்களாகும். இவ்வகை பெயர்ச்சொற்களும் (திடப் பெயர்ச்சொற்கள் - Concrete Nouns தவிர்ந்த) ஏனைய பெயர்ச்சொற்களின் எதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளிலும் அடங்கலாம்.

உதாரணம்:

  • Love - அன்பு
  • Fear - பயம்
  • Honesty - நேர்மை
  • Religion - மதம்
  • Happiness - மகிழ்ச்சி
  • Idea - யோசனை
  • Discipline - ஒழுக்கம்
  • Feelings - உணர்வுகள்
  • Mind - மனது
  • Trust - நம்பிக்கை

Compound Nouns
கலவைப் பெயர்ச்சொற்கள்

கலவைப் பெயர்ச்சொற்கள் (Compound Nouns) என்பவை இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து புதிய ஒரு பெயர்ச்சொல்லை சொல்லை தோற்றுவிப்பவையாகும். இவ்வகை பெயர்ச்சொற்களும் ஏனைய பெயர்ச்சொற்களின் எதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளிலும் அடங்கலாம்.

உதாரணம்:

  • Grandmother - பாட்டி
  • Housewife - இல்லத்தரசி
  • Airport - விமான நிலையம்
  • Newspaper - பத்திரிகை
  • Homework - வீட்டு வேலை
  • Friendship - நட்பு
  • Bathroom - குளியலறை 
  • Rainbow - வானவில் 
  • Earthquake - பூகம்பம் 
  • Seafood - கடல் உணவு
Previous Post Next Post