ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 66


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களின் நேரடி தமிழ் அர்த்தம் இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் கருத்து கீழுள்ளவாறே அமையப்பெறும்.


They live here.
அவர்கள் இங்கே வசிக்கிறார்கள்.

Do they live here?
அவர்கள் இங்கே வசிக்கிறார்களா?

They don't live here.
அவர்கள் இங்கே வசிப்பதில்லை.

Don't they live here?
அவர்கள் இங்கே வசிப்பதில்லையா?

That is my opinion.
அது எனது கருத்து.

Is that your opinion?
அது உங்கள் கருத்தா?

That is not my opinion.
அது எனது கருத்தல்ல.

Isn't that your opinion?
அது உங்கள் கருத்தல்லவா?

He did the right thing.
அவர் சரியானதை செய்தார்.

Did he do the right thing?
அவர் சரியானதை செய்தாரா?

He didn't do the right thing.
அவர் சரியானதை செய்யவில்லை.

Didn't he do the right thing?
அவர் சரியானதை செய்யவில்லையா?


I want to see that.
எனக்கு அதை பார்க்க வேண்டும்.

Do you want to see that?
உங்களுக்கு அதை பார்க்க வேண்டுமா?

I don't want to see that.
எனக்கு அதை பார்க்கத் தேவையில்லை.

Don't you want to see that?
உங்களுக்கு அதை பார்க்கத் தேவையில்லையா?

We will be in touch.
நாங்கள் தொடர்பில் இருப்போம்.

Will you be in touch?
நீங்கள் தொடர்பில் இருப்பீர்களா?

We won't be in touch.
நாங்கள் தொடர்பில் இருக்க மாட்டோம்.

Won't you be in touch?
நீங்கள் தொடர்பில் இருக்க மாட்டீர்களா?

We can go somewhere else.
நாங்கள் வேறு எங்காவது செல்ல முடியும்.

Can we go somewhere else?
நாங்கள் வேறு எங்காவது செல்ல முடியுமா?

We can't go anywhere else.
நாங்கள் வேறு எங்கும் செல்ல முடியாது.

Can't we go somewhere else?
நாங்கள் வேறு எங்காவது செல்ல முடியாதா?
Previous Post Next Post