ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 144


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்படும் வாக்கியங்கள் நேர்மறை, கேள்வி, எதிர்மறை மற்றும் எதிர்மறை கேள்வி வாக்கியங்கள் என நீங்கள் அவற்றை உங்களுக்கு விரும்பிய வடிவில் பேசக்கூடியவாறு தரப்படுகின்றன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Come this way.
இந்த வழியில் வாருங்கள்.

Go that way.
அந்த வழியில் செல்லுங்கள்.

Come close.
அருகில் வாருங்கள்.

Come soon.
விரைவில் வாருங்கள்.

Come early.
நேரகாலத்துடன் வாருங்கள்.

Come up.
மேலே வாருங்கள்.

Come out.
வெளியே வாருங்கள்.

She cooked lunch.
அவள் மதிய உணவு சமைத்தாள்.

Did she cook lunch?
அவள் மதிய உணவு சமைத்தாளா?

She didn't cook lunch.
அவள் மதிய உணவு சமைக்கவில்லை.

Didn't she cook lunch?
அவள் மதிய உணவு சமைக்கவில்லையா?

You have that book. 
உங்களிடம் அந்த புத்தகம் இருக்கிறது.

Do you have that book?
உங்களிடம் அந்த புத்தகம் இருக்கிறதா?

You don't have that book.
உங்களிடம் அந்த புத்தகம் இல்லை.

Don't you have that book?
உங்களிடம் அந்த புத்தகம் இல்லையா?


It is a common problem.
அது ஒரு பொதுவான பிரச்சினை.

Is it a common problem?
அது ஒரு பொதுவான பிரச்சினையா?

It is not a common problem.
அது ஒரு பொதுவான பிரச்சினை அல்ல.

Isn't it a common problem?
அது ஒரு பொதுவான பிரச்சினை அல்லவா?

He spilled the water.
அவன் தண்ணீரைக் கொட்டினான்.

Did he spill the water?
அவன் தண்ணீரைக் கொட்டினானா?

He didn't spill the water.
அவன் தண்ணீரைக் கொட்டவில்லை.

Didn't he spill the water?
அவன் தண்ணீரைக் கொட்டவில்லையா?
Previous Post Next Post