ஆங்கில வாக்கியங்கள் | Let's speak English | பகுதி 149


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


How old is your friend?
உங்கள் நண்பரின் வயது என்ன?

He is about my age.
அவனுக்கு என் வயது இருக்கும்.

He can swim.
அவனால் நீந்த முடியும்.

Can he swim?
அவனால் நீந்த முடியுமா?

He can't swim.
அவனால் நீந்த முடியாது.

Can't he swim?
அவனால் நீந்த முடியாதா?

She likes ice cream very much.
அவளுக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.

I hung a picture on the wall.
நான் ஒரு படத்தை சுவரில் தொங்கவிட்டேன்.

They can't figure it out.
அவர்களால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.

The teacher went on reading.
ஆசிரியர் தொடர்ந்து வாசித்தார்.

Is it possible today?
இன்று அது சாத்தியமா?

It is not possible today.
இன்று அது சாத்தியமில்லை.

Isn't it possible today?
இன்று அது சாத்தியமில்லையா?
We advised him to go there.
நாங்கள் அவரை அங்கு செல்ல அறிவுறுத்தினோம்.

Did you advise him to go there?
அவரை அங்கு செல்ல நீங்கள் அறிவுறுத்தினீர்களா?

We didn't advise him to go there.
அவரை அங்கு செல்ல நாங்கள் அறிவுறுத்தவில்லை.


Did you buy anything?
நீங்கள் ஏதாவது வாங்கினீர்களா?

I didn't buy anything.
நான் எதுவும் வாங்கவில்லை.

Didn't you buy anything?
நீங்கள் எதுவும் வாங்கவில்லையா?

Did he arrive at the station on time?
அவர் சரியான நேரத்தில் ஸ்டேஷனுக்கு வந்தாரா?

He didn't arrive at the station on time.
அவர் சரியான நேரத்தில் ஸ்டேஷனுக்கு வரவில்லை.

He arrived at the station 15 minutes late.
அவர் 15 நிமிடங்கள் தாமதமாக ஸ்டேஷனுக்கு வந்தார்.

I compared the copy with the original.
நான் நகலை அசலுடன் ஒப்பிட்டேன்.

Did you compare the copy with the original?
நீங்கள் நகலை அசலுடன் ஒப்பிட்டீர்களா?

I didn't compare the copy with the original.
நான் நகலை அசலுடன் ஒப்பிடவில்லை.

Didn't you compare the copy with the original?
நீங்கள் நகலை அசலுடன் ஒப்பிடவில்லையா?

Do what you like.
நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்.

Don't do what you like.
நீங்கள் விரும்பியதைச் செய்யாதீர்கள்.

She admitted that it was true.
அது உண்மை என்று அவள் ஒப்புக்கொண்டாள்.

Please choose one colour.
தயவுசெய்து ஒரு நிறத்தை தெரிவு செய்யுங்கள்.

What is he doing now?
அவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?

He is doing nothing.
அவர் எதுவும் செய்துகொண்டு இல்லை.
Previous Post Next Post