ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 159


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

ஆங்கிலம் கற்க, ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் எமது Telegram Channel மற்றும் Telegram Group  இல் இணைந்துகொள்ள முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


He interrupted me.
அவர் எனக்கு தடங்கல் விளைவித்தார்.

Did he interrupt you?
அவர் உங்களுக்கு தடங்கல் விளைவித்தாரா?

He didn't interrupt me.
அவர் எனக்கு தடங்கல் விளைவிக்கவில்லை.

Didn't he interrupt you?
அவர் உங்களுக்கு தடங்கல் விளைவிக்கவில்லையா?

There is a crack in the wall.
சுவரில் ஒரு வெடிப்பு உள்ளது.

Is there a crack in the wall?
சுவரில் ஒரு வெடிப்பு உள்ளதா?

There is no crack in the wall.
சுவரில் எந்த வெடிப்பும் இல்லை. 

Isn't there a crack in the wall?
சுவரில் ஒரு வெடிப்பு இல்லையா?

We compromise on that.
நாங்கள் அதில் சமரசம் செய்கிறோம்.

Do we compromise on that?
நாங்கள் அதில் சமரசம் செய்கிறோமா?

We don't compromise on that.
நாங்கள் அதில் சமரசம் செய்வதில்லை.

Don't we compromise on that?
நாங்கள் அதில் சமரசம் செய்வதில்லையா?


They breached the contract.
அவர்கள் ஒப்பந்தத்தை மீறினார்கள்.

Did they breach the contract?
அவர்கள் ஒப்பந்தத்தை மீறினார்களா?

They didn't breach the contract.
அவர்கள் ஒப்பந்தத்தை மீறவில்லை.

Didn't they breach the contract?
அவர்கள் ஒப்பந்தத்தை மீறவில்லையா?

They will suspend you.
அவர்கள் உங்களை இடைநீக்கம் செய்வார்கள்.

Will they suspend you?
அவர்கள் உங்களை இடைநீக்கம் செய்வார்களா?

They won't suspend you.
அவர்கள் உங்களை இடைநீக்கம் செய்ய மாட்டார்கள்.

Won't they suspend you?
அவர்கள் உங்களை இடைநீக்கம் செய்ய மாட்டார்களா?

I have the evidence.
என்னிடம் ஆதாரம் உள்ளது.

Do you have the evidence?
உங்களிடம் ஆதாரம் உள்ளதா?

I don't have the evidence.
என்னிடம் ஆதாரம் இல்லை.

Don't you have the evidence?
உங்களிடம் ஆதாரம் இல்லையா?
Previous Post Next Post