ஆங்கிலத்தில் பேசுவோம் | Spoken English Practice | பகுதி 180


ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்கப் பயிற்சி எடுக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு பயிற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு அவசரமாக உங்களால்  ஆங்கிலத்தில் கதைக்க முடியும். இங்கே ஆங்கிலத்தில் கதைக்கப் பயிற்சி செய்யக்கூடிய சில சிறிய வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

ஆங்கிலத்தில் கதைக்க உதவும் சிறிய வாக்கியங்கள் (பகுதி 03)

Get along - பழகவும்
நல்ல உறவை வைத்துக் கொள்ளவும்.

Get away - விலகிச் செல்லுங்கள்
ஒரு சூழ்நிலை அல்லது இடத்திலிருந்துதப்பிச்செல்லவும்.

Get back  - திரும்பவும்
ஒரு இடத்துக்கு அல்லது ஒரு சூழ்நிலைக்குத் திரும்பவும்.

Get by - சமாளிக்கவும்
ஒரு சூழ்நிலையை சமாளிக்கவும்.

Get down - கீழே இறங்குங்கள்
ஓரிடத்தில் இருந்து கீழே இறங்குங்கள்.

Get off - இறங்குங்கள் 
வாகனத்தில் இருந்து இறங்குங்கள்.

Get on - ஏறுங்கள்
வாகனத்துக்கு ஏறுங்கள்.

Get in - உள்ளே நுழை
ஒரு கட்டிடம் அல்லது வாகனத்தினுள் நுழைதல்

Get out - வெளியேறு
ஒரு இடம் அல்லது சூழ்நிலையை விட்டு வெளியேறல்

Get over - மீண்டு வாருங்கள் / விடுபடுங்கள்
ஒரு நோய், ஏமாற்றம் அல்லது வலியிலில் இருந்து மீண்டு வாருங்கள்.

Get through - கடந்து செல்
கடினமான சூழ்நிலையை வெற்றிகரமாக கடந்துசெல்லல்.

Get up - எழுந்து நில் 
உட்கார்ந்து அல்லது ஒரு நிலையில் இருந்து எழுந்து நிற்றல்.

Get rid - விடுபடுங்கள்
ஒன்றில் இருந்து விடுபடுதல் (தவிர்த்தல்).

Get together - ஒன்றுகூடல் / ஒன்றுபடுதல்
ஒரு நோக்கத்துக்காக ஒன்றுபடுதல் அல்லது ஒன்றுகூடல்

Get ahead - முன்னேறுங்கள்
ஒரு தொழில், வியாபாரம் அல்லது சூழ்நிலையில் முன்னேறுங்கள்

Get caught up - மாட்டிக்கொள்தல்
எதிர்பாராமல் ஏதாவது ஒன்றில் மாட்டிக்கொள்தல்.

Get cold feet - தைரியம் இழத்தல்
தைரியம் அல்லது நம்பிக்கையை இழத்தல்.

Get it - புரிந்துகொள்ளல்.
ஒன்றைப் புரிந்துகொள்ளல் அல்லது விளங்கிக்கொள்ளல்

Get out of hand - கைமீறிப் போதல்
கைமீறிப் போதல் அல்லது கட்டுப்பாட்டை இழத்தல்

Get stuck - சிக்கிக்கொள்ளுதல்
ஓரிடத்தில் சிக்கிக்கொள்ளுதல் அல்லது தொடர்ந்து செல்ல முடியாமல் சிக்கிக்கொள்ளுதல்.

Get to - அடைதல்
ஓர் இடத்தை அடைதல் அல்லது இலக்கை அடைதல்.
Previous Post Next Post