Model Application Form | மாதிரி விண்ணப்பப் படிவம்


Model Application Form

மாதிரி விண்ணப்பப் படிவம்

கவனிக்கவும்:
இவ்விணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும் பதவி வெற்றிடங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அறிவித்தல் / விளம்பரத்துடன் குறித்த பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பப் படிவம் / மாதிரி விண்ணப்பப் படிவம் பிரசுரிக்கப்படாதவிடத்து, சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மூலம் விண்ணப்பிக்கவும் எனக் குறிப்பிட்டிருந்தால் மட்டும் இங்கே தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தினை நீங்கள் பயன்படுத்தலாம்.

பொதுவாக ஓர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பப் படிவம் / மாதிரி விண்ணப்பப் படிவம், அப்பதவி வெற்றிட அறிவித்தல் / விளம்பரத்துடன் பிரசுரிக்கப்படும். இதன் போது நீங்கள் குறித்த அந்த விண்ணப்பப் படிவத்தையே உபயோகிக்க வேண்டும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் இங்கே தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தினை நீங்கள் உபயோகித்தல் கூடாது.

தொழிவாய்ப்புக்களுக்கும் / பதவி வெற்றிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் உங்களுக்கு உதவும் நோக்கிலேயே இம்மாதிரி விண்ணப்பப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது, எனினும் இவ்விண்ணப்பப் படிவத்தினை உபயோகித்து நீங்கள் விண்ணப்பிக்கும் குறித்த பதவி வெற்றிடதிற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது இல்லையா என்பது பற்றிய எந்த உத்தரவாதமும் எம்மால் வழங்கப்படமாட்டாது என்பதனை தயவுசெய்து கருத்திற்கொள்ளுங்கள்.


Important:
Use this application form only when sample/model application has not been given (When given as ‘Self Prepared Application Form and apply’) for particular vacancies published in this website.





குறிப்பு:
இம்மாதிரி விண்ணப்படிவமானது, சாதாரண தரம் வரை கல்விகற்றவர்கள் முதல் தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரி உத்தியோகத்தர்கள் வரையில் உபயோகப்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இவ்விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் 'தேவையற்றவை' எனக் கருதும் பகுதிகளை இதிலிருந்து அகற்றிவிடலாம்.