இலங்கையில் டெங்கு - 90,000 நோயாளிகள், 269 பேர் மரணம்..!


இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகின்றது. இனங்காணப்பட்ட நோயாளிகளில் 30 சதவீனமானோர் 15 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் என தெரிவிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டில் மட்டும்  இதுவரை சுமார் 90,000 நோயாளிகள் பதிவாகியுள்ளன. இதில் 269 பேர் இறந்துள்ளனர்.அனைத்து மாகாணங்களிலும் டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் கூடிய இறப்புக்கள் 136 மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. இறந்தவர்களில் 50 சதவீதமானோர் 15 வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்டோர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 


சென்ற வருடம் நாடுபூராகவும் 55,000 டெங்கு நோயாளிகளே பதிவாகியிருந்தனர். இதில் 97 மரணங்கள் பதிவாகி இருந்தது. எனினும் இந்த வருடம் இதுவரை 90,000 நோயாளிகளும் 269 மரணங்களும் பதிவாகியுள்ளன.  டெங்கு ஒழிப்பு தொடர்பில் பல விழிப்புணர்ச்சி நிகழ்ச்சித்திட்டங்கள் அரசாங்கத்தினால் செயட்படுத்தப்படுகிறது. 

சுற்றுச்சூழலை பாதுகாப்பாகப் பேணுவதன் மூலமும், அன்றாட வாழ்க்கையில் பாவிக்கும் பிளர்த்திக், பொலித்தீன் மற்றும் ஏனைய நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்களை உரியமுறையில் கையாளுவதின் மூலமும் டெங்கு நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம். 


எங்கள் மற்றும் எங்களை  சூழவுள்ளவர்களின் பாதுகாப்புக்கருதி, எமது சுற்றுச்சூழலை பாதுகாப்பாக பேணுவோம்.. இலங்கையில் ஒரு மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள டெங்கு நுளம்பை அழித்த்தொழிக்க நாம் அனைவரும் ஒன்றுதிரள்வோம்.  

நன்றி,
மாணவர் உலகம்.
أحدث أقدم