'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.
நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை இலகுவாக்கும் நோக்கில் இங்கே சில ஆங்கில வாக்கியங்கள் தரப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பட பயன்படுத்த முடியும்.
இங்கே அவ்வாறான சில ஆங்கில வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.
இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.
He saw us.
அவன் எங்களைப் பார்த்தான்.
Did he see us?
அவன் எங்களைப் பார்த்தானா?
He didn't see us.
அவன் எங்களைப் பார்க்கவில்லை.
Didn't he see us?
அவன் எங்களைப் பார்க்கவில்லையா?
I will meet you next week.
நான் உங்களை அடுத்த வாரம் சந்திப்பேன்.
Will you meet us next week?
நீங்கள் எங்களை அடுத்த வாரம் சந்திப்பீர்களா?
I won't meet you next week.
நான் உங்களை அடுத்த வாரம் சந்திக்க மாட்டேன்.
Won't you meet us next week?
நீங்கள் எங்களை அடுத்த வாரம் சந்திக்க மாட்டீர்களா?
You should have gone there.
நீங்கள் அங்கே சென்றிருக்க வேண்டும்.
Should I have gone there?
நான் அங்கே சென்றிருக்க வேண்டுமா?
You shouldn't have gone there.
நீங்கள் அங்கே சென்றிருக்கக் கூடாது.
Shouldn't I have gone there?
நான் அங்கே சென்றிருக்கக் கூடாதா?
They obey the rules.
அவர்கள் விதிமுறைகளுக்கு கீழ்ப்படிகிறார்கள்.
Do they obey the rules?
அவர்கள் விதிமுறைகளுக்கு கீழ்ப்படிகிறார்களா?
They don't obey the rules.
அவர்கள் விதிமுறைகளுக்கு கீழ்ப்படிவதில்லை.
Don't they obey the rules?
அவர்கள் விதிமுறைகளுக்கு கீழ்ப்படிவதில்லையா?
We have enough information.
எங்களிடம் போதுமான தகவல்கள் உள்ளன.
Do we have enough information?
எங்களிடம் போதுமான தகவல்கள் உள்ளனவா?
We don't have enough information.
எங்களிடம் போதுமான தகவல்கள் இல்லை.
Don't we have enough information?
எங்களிடம் போதுமான தகவல்கள் இல்லையா?
He was selected.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Was he selected?
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டாரா?
He was not selected.
அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
Wasn't he selected?
அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லையா?