தாஜ் மஹாலை சுற்றி பெட்ரோல் / டீசல் வாகனங்களுக்குத் தடை..!

தாஜ் மஹாலை காப்பாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடி உத்தரவு!

தாஜ் மஹால் அமைந்திருக்கும் பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள இயக்க தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

தாஜ் மாஹலை பாதுகாத்து வரும் குழுவின் பரிந்துரையின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பனால், தாஜ் மஹாலின் பளிங்கு கற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாஜ் மஹாலை காப்பாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடி உத்தரவு!

இந்திய அரசின் இந்த முடிவை மீறி தாஜ் மஹாலை சுற்றி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்கள் இயக்கப்பட்டால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, தவறை பொறுத்து அபராதம் வசூலிக்கப்படும் எனவும் இந்திய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாஜ் மஹாலை சுற்றி இயங்கக்கூடிய இலகு ரக வாகனங்கள் பல, இயற்கை எரிவாயு ஆற்றலுக்கு மாற தாஜ் மஹாலை பாதுகாக்கும் குழு தீவிரமாக வலியுறுத்திவருகிறது.


أحدث أقدم