சிறந்த நாடாக இலங்கைக்கு இரண்டு விருதுகள்..!



சுற்றுலாத்துறைக்கு வழங்கப்படும் உலக சுற்றுலா விருதுகளில் ஆசியாவின் முன்னணி  இலக்கு மற்றும் சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 

மாலைதீவில் நடைபெற்ற உலக சுற்றுலாதுறைக்கான விருது வழங்கும் நிகழ்விலேயே இவ்வாறு இலங்கை பெயரிடப்பட்டது.

இலங்கையில் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு முயற்சியில் இவ்விருதுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவுக்குவந்ததன் பின்னர் இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக அவர் தெரிவுத்துள்ளார்.

உலக சுற்றுலாதுறைக்கான விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு சிறந்த விருதுகளை பெற்றுக்கொண்டதனூடாக இலங்கை பல சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post