கடலுக்கடியில் நிகழ்ந்த கொடுமை..!


இந்தோனேசியாவில் கொகோயா எனும் தீவில் மீனவர்கள் சிலர்  உல்லாசப்பயணிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடற்பசுக்களை கூண்டுகளில் கட்டிவைத்து, அவற்றுடன் புகைப்படம் எடுப்பதற்காக உல்லாசப்பயணிகளிடம் பணம் அறவிட்டுள்ளனர். 

கொகோயா தீவுக்கு சென்ற மூழ்காளிகள் (Divers) இருவர் அநியாயமான முறையில் கட்டப்பட்டுள்ள இப்பசுக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவற்றை சங்கிலியால் கட்டப்பட்டிருந்த இடங்களில் இரத்தக் கறைகள் படிந்திருந்தன. இப்பசுக்களை விடுவிக்குமாறு அவர்கள் மீனவர்களிடம் வேண்டியுள்ளனர். இதற்கு மீனவர்கள் இணங்கினாலும், அவர்கள் அவற்றை விடுவிக்காத காரணத்தினால் அவற்றின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவுசெய்து இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.மறுநாளே வனவிலங்குப்பாதுகாப்பு அதிகாரிகளினால் இக்கடற்பசுக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post