
உலகின் மூன்றாவது பெரிய நீர் பரப்பையும், உலகிலுள்ள மொத்த சமுத்திரங்களில் ஐந்தில் ஒரு பங்கையும் இந்து சமுத்திரம் கொண்டுள்ளது.
பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இணைந்து நடாத்தும் 'இந்து சமுத்திர மாநாடு – 2017' இனை ஆகஸ்ட் மாதம் 31ம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 02ம் திகதி வரை கொழும்பில் நடாத்துவதற்கு இந்திய மன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இம்மாநாட்டில் வலயத்தனி பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சூழல் காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
முப்பது நாடுகளுக்கும் அதிகமான நாடுகளின் உயர் மட்ட தலைவர்கள் மற்றும் சிறப்பதிதிகள் அம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். அதனடிப்படையில் இந்திய மன்றத்தின் ஏற்பாட்டில் அம்மாநாட்டினை கொழும்பில் நடாத்துவது தொடர்பாக பிரதமர் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
Source: dgi.gov.lk