விண்வெளி ராணுவம் உருவாகிறது..!


விண்வெளி ஆராய்ச்சியில் இன்று பல நாடுகள் ஆர்வம் செலுத்துவதால், அமெரிக்காவுக்கு மேலுள்ள விண்வெளிப் பகுதியை பாதுகாக்க தனி படை தேவை என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பினர் நினைக்கின்றனர்.

அவர்கள், அண்மையில், 'அமெரிக்க விண்வெளிப் படை' ஒன்றை அமைக்க சட்ட முன்வரைவை உருவாக்கி விவாதத்திற்கு விட்டுள்ளனர். அமெரிக்க விண்வெளியின் பாதுகாப்பு தொடர்பான அனைத்தையும் இந்தப் படை மேற்பார்வை செய்யும்.

இருந்தாலும், அந்நாட்டு விமானப் படையின் ஒரு அங்கமாகவே செயல்படும் என்று சட்டம் இயற்றுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அமெரிக்க விமானப் படையின் தலைமை இதை எதிர்க்கிறது. 'ஏற்கனவே அந்த வேலையில் முக்கால்வாசியை நாங்கள் செய்து கொண்டுதானே இருக்கிறோம், பிறகு எதற்கு தனி விண்வெளிப்படை?' என்று அமெரிக்க விமானப் படை உயர் அதிகாரி ஒருவர் கேட்டிருக்கிறார்.
Previous Post Next Post