ஒற்றைக்கண் குழந்தை! – Cyclopia எனும் குறைபாடு


2006 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒற்றைக்கண்ணுடன் ஒரு குழந்தை பிறந்தது.

புற்று நோய் எதிர்ப்பு மருந்தை தாய் பாவித்துவந்தமை இதற்கான காரணமாக முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும் குழந்தை cyclopia எனும் வினோத மரபணு நோயால் பாதிப்படைந்திருந்தமை அறியப்பட்டது.

இக் குழந்தையின் கண் சரியாக நெற்றியின் மத்தியில் அமைந்திருந்தமையுடன் குழந்தையின் மூளையின் ஒரு பகுதி முற்றாக இயங்கவில்லை. ஆனால், மறுபகுதி வழமைபோல் இயங்கியுள்ளது. பிறந்து அடுத்த நாள் இந்த குழந்தை இறந்தது.

Cyclopcyclopia எனும் குறைபாடு, கண்குழிகள் சரியாக உருவாகாமல் இருப்பதை இருப்பதை குறிக்கும். விலங்குகளிடையே 16000 இல் ஒரு பிறப்பு இப்படி இருப்பதாக அறியப்படுகிறது.

கிரேக்க புராணங்களில் கூறப்படும் மூன்று கண் உருவங்களுக்கும் இந்த குறைப்பாட்டை ஆதாரமாக கூறுகிறார்கள்.

Previous Post Next Post