பாடசாலை மாணவர்களுக்காக புதிய காப்புறுதித்திட்டம்..!

 Image result for akila viraj kariyawasam with students

பாடசாலை மாணவர்களுக்காக கூட்டுபொறுப்புடைய சுகாதார காப்புறுதி..!

05 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வயதுப்பிரிவில் காணப்படுகின்ற 4.5 மில்லியன் இந்நாட்டு பாடசாலை மாணவர்களுக்காக 200,000 பெறுமதியான காப்புறுதி வீதம் இலவசமாக பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2,700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள காப்புறுதி திட்டத்தின் ஊடாக வெளிச் சிகிச்சைகளுக்காக 10,000 ரூபா வீதமும், வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும் குறித்த வயது நோயாளர்களுக்கு 100,000 ரூபா காப்புறுதியும் வழங்கப்பட உள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களின் அவசர மரணத்தின் போது குறித்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு 100,000 ரூபா வீதமும், தமது தாய் அல்லது தந்தை மரணதுக்காக குறித்த பாடசாலை மாணவருக்கு 75,000 ரூபா வீதமும் காப்புறுதி திட்டத்தின் மூலம் செலுத்தப்பட உள்ளது.

மேலும் பாடசாலை மாணவர் பூரண அங்கவீனத்துக்கு உள்ளாகும் போது 100,000 ரூபா வீதமும், பகுதியளவில் காயமடைகின்ற போது 50,000 ரூபா தொடக்கம் 100,000 வரையிலும் காப்புறுதி தொகை வழங்கப்பட உள்ளது.

அதனடிப்படையில், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 2,348 மில்லியன் ரூபா வருடாந்த தவணையின் கீழ், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் மூலம் இக்காப்புறுதி செயன்முறையினை செயற்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Source: அரசாங்க தகவல் திணைக்களம் / அமைச்சரவை தீர்மானங்கள் (22. 08.2017)

أحدث أقدم