12 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் காணாத மிகப்பெரிய சூரியப் பிழம்பு..!கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சூரியப் பிழம்பைக் கண்ட விஞ்ஞானிகள் அது குறித்த நுண் விவரங்களைத் திரட்டியுள்ளனர்.

1996-ம் ஆண்டு இத்தகைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது தொடங்கியது முதல் இது 8-வது மிகப்பெரிய சூரியப் பிழம்பாகும்.

மிகப்பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டதால் கதிர்வீச்சு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆனால் இது பூமியின் தற்காப்பு அமைப்புகளால் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்க கூடியதல்ல. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமும் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு மற்றொரு காரணமாகும்.

இந்தச் சூரியப்பிழம்பு செப்டம்பர் 6.2017-ல் எதிர்பாராத விதமாக தோன்றியது என்று ஷெஃபீல்ட் பல்கலை. மற்றும் பெல்ஃபாஸ்ட் ராணி பல்கலைக் கழகம் உள்ளிட்ட ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மூன்று X-வகையினத்தைச் சேர்ந்த பிழம்புகளில் இந்த வகையும் ஒன்று. மிகப்பெரிய பிழம்பு 48 மணிநேரம் விஞ்ஞானிகளால் காணப்பட்டுள்ளது.

மிகப்பெரிய சூரியப் பிழம்புகள் அல்லது வெடிப்புகள் பொதுவாக 100 கோடி ஹைட்ரஜன் வெடிகுண்டுகளின் ஆற்றலுக்குச் சமமானது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து

பிளாஸ்மாவை விநாடிக்கு 2,000 கிமீ வேகத்தில் வெளியேற்றக்கூடியது. இது coronal mass ejections என்று அழைக்கப்படுகிறது.

விண்வெளித் தட்பவெப்பம் என்று இத்தகைய சக்தி வாய்ந்த நிகழ்வுகள் வர்ணிக்கப்படுகின்றன. இதனால் செயற்கைக்கோள்கள், ஜிபிஏஸ் சிக்னல்கள் பாதிப்படையலாம்.

லா பால்மாவில் உள்ள ஸ்வீடன் சூரிய தொலைநோக்கி மூலம் இந்த அரிய நிகழ்வின் விவரங்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளனர்.

விண்வெளித் தட்பவெப்பம் என்ற பல பில்லியன் பவுண்டுகள் மதிப்பு கொண்ட துறை, செயற்கைக் கோள்களை சூரியனின் இத்தகைய சக்தி வாய்ந்த நிகழ்வுகளிலிருந்து காப்பதற்கு பெரிதும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Source : thehindu.com

Previous Post Next Post