இந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்..!


இந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட 12 முக்கிய கண்டுபிடிப்புக்கள்..!

உலகம் முழுவதும் வாழும் மக்களால் தமது அன்றாட வாழ்வில் உபயோகிக்கப்படும் பொருட்களில் சில முக்கிய பொருட்கள் இந்தியர்களினாலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றில் முக்கிய 12 கண்டுபிடிப்புக்கள் பற்றிய விபரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. 1. பூச்சியம் (Zero):

 கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இந்திய கணித மேதையான ஆரியபட்டாவினாலேயே பூச்சியம் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

பூச்சியத்தின் வருகையினாலேயே பிற்காலத்தில் பல விஞ்ஞானிகள் இலகுவாக பல கணித சமன்பாடுகளையும், சூத்திரங்களையும் அமைத்துத் தந்தனர்.

சாதாரண கணிப்பான் முதல் நவீன கணனி வரை உபயோகிக்கப்படும் பைனரி முறைமை (binary system) கூட பூச்சியத்தை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


2. அடிமட்டம் (Ruler):


கி.பி. 1500 மற்றும் அதற்கு முன்னைய காலத்திலிருந்தே இந்தியர்கள் அடிமட்டத்தை உபயோகித்தாகக் கூறப்படுகின்றது. வட இந்தியாவிலும், இன்றைய பாகிஸ்தானிலும் மேற்கொள்ளப்பட்ட  அகழ்வுகளில் யானைத் தந்தங்களால் ஆன பல அடிமட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புராதன கட்டிடக்கலையில் இவ்வடிமட்டங்கள் மூலம் மிக நுணுக்கமான மற்றும் துல்லியமான அளவுகளைக் கொண்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


3. சதுரங்கம் (Chess):

இன்று பரவலாக விளையாடப்படும் செஸ் விளையாட்டின் புராதன வடிவமான சதுரங்கம் இந்தியர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குப்தர் காலத்தில் இவ்விளையாட்டு மிகவும் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுகின்றது.

பிற்காலத்தில் இவ்விளையாட்டு பிரித்தானியா மற்றும் ஏனைய மேலைத்தேய நாடுகளிலும் மிகவும் பிரசித்திபெற்ற விளையாட்டாக மாறியது.


4. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை (Plastic Surgery):


சுஷ்ருதா எனப்படும் இந்திய மருத்துவ மேதையினாலேயே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முதன் முதலில் மேட்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சுஷ்ருதாவினால் மூலிகை மருத்துவம் மற்றும் சத்திரசிகிச்சை மருத்துவம் பற்றி பல நூல்களும் எழுதப்பட்டுள்ளன.

இவரின் திறம்வாய்ந்த மருதத்துவப் பணியினாலும், சேவையினாலும் இந்தியாவில் இவர் சத்திரசிகிச்சை மருத்துவத்தின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.


5. கண்புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery): 


கண்புரை அறுவை சிகிச்சையும் (Cataract Surgery) சுஷ்ருதா எனப்படும் இந்திய மருத்துவ மேதையினாலேயே முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டது. இச்சிகிச்சை வெகுவாக ஏனைய நாடுகளிலும் பரவியது.

இச்சிகிச்சை பற்றி கற்றுக்கொள்ள முற்காலத்தில் இத்துறைசார் பல சத்திரசிகிச்சை வைத்தியர்கள் வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.6. கம்பியில்லா தகவல்தொடர்பாடல் (Wireless Communication):


சேர் ஜெகதீஷ் சந்திரபோஸ் (Jagdish Chandra Bose) எனும் இந்தியரே 1895 இல் கம்பியில்லா தகவல்தொடர்பாடல் (Wireless Communication) இனை முதன் முதலில் பரிசோதித்தவர். கல்கத்தாவில் அமைத்துள்ள நகர மண்டபமொன்றில் 75 அடி தூரத்திற்கு மின்காந்த அலைகளை வெற்றிகரமாக அனுப்பினார். இம்மின்காந்த அலைகள் அக்கட்டிடத்தின் சுவரையும் தாண்டி, ஓர் மணியினையும் ஒலிக்க வைத்ததுள்ளது.

இவரின் கண்டுபிடிப்பினை ஆதாரமாக வைத்தே பிற்காலத்தில் மார்க்கோனி வானொலியைக் கண்டுபிடித்தாகக் கூறப்படுகின்றது.


8. யோகா (Yoga):


இன்றளவிலும் பிரசித்திபெற்றிருக்கும் யோகா எனும் உடற்பயிற்சி முறைமை இந்தியர்களினாலேயே உலகிற்கு வழங்கப்பட்டது.

யோகா உடற்பயிற்சி செய்யும் முறை, அதன் நன்மைகள் பற்றி உலகளவில் இன்றும் பரவலாக பேசப்படுவதோடு, பல உடல்/உள நோய்களுக்கு யோகா ஒரு நிவாரணமாகக் கருதப்படுகிறது.


9. இயற்கை இழை/நூல் (Natural Fiber): 


இந்தியர்களே முதன் முதலில் பருத்தியை உபயோகித்து ஆடை நெய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அதுவரை காலமும் விலங்குகளின் ரோமங்களினால் மட்டுமே ஆடைகள் தயாரித்து உபயோகிக்கப்பட்டன.

எனினும் பருத்தியின் வருகை காலப்போக்கில் ஒட்டுமொத்த ஆடை மற்றும்  ஆடை அலங்காரத்தின் முறைமையையே மாற்றியமைத்தது.


10. பறிப்பு கழிப்பறைகள் (Flush Toilets):இன்று உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் பறிப்பு கழிப்பறைகள் (Flush Toilets) 5000 வருடங்களுக்கு முன் இந்தியாவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.


11. ஷாம்பு (Shampoo):


சாம்போ எனும் ஹிந்தி வார்த்தையில் இருந்தே இன்றைய ஷாம்பு (Shampoo) எனும் வார்த்தை தோற்றம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது. தலையை மஸாஜ் செய்யும் திரவியமாகவே ஷாம்பு முதலில் பயன்பாட்டிற்கு வந்தது. இயற்கை மூலிகைகள் மற்றும் எண்ணையைப் பயன்படுத்தியே முதலில் ஷாம்பு தயாரிக்கப்பட்டது.

இதன் மேல் கொண்ட அதீத பிரியம் காரணமாக அக்காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர் இதனை பிரித்தானியாவிற்குக் கொண்டுசென்று அங்கே அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.


12. பொத்தான்கள் (Buttons):


இற்றைக்கு 5000 வருடங்ககுக்கு முன்பே பொத்தான்கள் உபயோகிக்கப்பட்டதற்கான சான்றுகள், மொஹஞ்சதாரோ அகழ்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டு பிடிக்கப்பட்ட இப்பொத்தான்கள், கடல் சிப்பிகளை உபயோகித்து உருவாக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள். 


Previous Post Next Post