சுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் ? எதற்கு?


சுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் ? எதற்கு?

சுவிஸ்சர்லாந்தில் மாடு வளர்ப்பவர்கள் அவற்றின் மீது அதிக பிரியம் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Watch: மனித மாமிசம் உண்ணும் குள்ள மனிதர்கள்

சுவிச்சர்லாந்தில் உள்ள பசு மாடுகளில் வருடத்திற்கு 2% மாடுகள் உயிரிழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாடுகள் உட்கொள்ளும் உணவு சரியான முறையில் செரிமானம் அடையாததே இவ்வுயிரிழப்பிற்குக் கரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினைக்கு செயற்கை முறையில் தீர்வு கண்ணும் பொருட்டே மாடுகளின் வயிற்றில் இத்துளைகள் இடப்பட்டுள்ளன.


இத்துளைகள் மூலம் மாடுகளின் வயிற்றில் செரிமானத்தை அதிகரிக்கும் பக்டீரியாக்கள் செயற்கை முறையில் உட்புகுத்தப்படுகின்றன. இதனால் அவை உண்ணும் உணவுகள் முழுமையாக செரிமானம் அடைவதோடு, இத்துளைகள் மூலம் மாட்டின் உரிமையாளருக்கு அதனை பரிசோத்தித்தும் பார்க்கலாம்.


இத்துளைகளில் ஒருவகை இறப்பரினால் ஆன பாதுகாப்பாக திறந்து மூடக்கூடிய உபகாரணத்துடன், இதற்காகத் தயாரித்த ஓர் விசேட மூடி பொருத்தப்படுவதால் மாட்டின் உடலநலத்திற்கு இதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது என ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்துளைகள் இடப்பட்டு சில தினங்களுக்கு மாடுகளுக்கு அதன் வலி இருக்குமெனினும், அதன் பின் இத்துளைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதால் எந்த வலியும் அவற்றிட்கு இல்லை என கூறப்படுகிறது.


இது மாடுகளை துன்புறுத்தும் ஓர் செயல் என PETA போன்ற சில அமைப்புக்கள் தெரிவித்திருந்தாலும், உண்மையில் இது மாடுகளுக்கு நன்மைபயக்கும் ஓர் விடயம் என்றே ஆராய்ச்சியாளர்களும், மாட்டு உரிமையாளர்களும் கருதுகின்றனர்.

أحدث أقدم