ஆங்கிலம் கற்போம்: Lesson 1 - ஆங்கில எழுத்துக்கள் (The English Alphabets)


ஆங்கிலத்தில் மொத்தமாக 26 எழுத்துக்கள் உள்ளன.

இந்த 26 எழுத்துக்களையும்:
  1. கெப்பிட்டல் - பெரிய எழுத்துக்கள் (Capital Letters) 
  2. சிம்பிள் - சிறிய எழுத்துக்கள் (Simple Letters) 
என இரு முறைகளில் எழுதலாலம்.


இந்த 26 எழுத்துக்களிலும்:
  1. A E I O U எனும் 5 எழுத்துக்கள் உயிரெழுத்துக்களாகவும்,

  2. B C D F G H J K L M N P Q R S T V W X Y Z எனும் 21 எழுத்துக்கள் மெய்யெழுத்துக்களாகவும் உள்ளன.

பெரிய எழுத்துக்கள் (Capital Letters) மற்றும் சிறிய எழுத்துக்கள் (Simple Letters) எழுதுவது பற்றிய விதிமுறைகள்

ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்கள் (Capital Letters) பொதுவாக இரு முக்கிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
  1. வாக்கியத்தின் தொடக்கத்தை காட்டுதல்.
  2. ஒரு பெயர்ச்சொல்லானது உரித்தான பெயர்சொல் (proper noun) எனக் காட்டுதல்.

வாக்கியத்தின் தொடக்கத்தை காட்டுதல்:

We went to shop. The shop was closed.

குறிப்பு: ஆங்கிலத்தில் 'நான்' அதாவது  'I' என எழுதும் போது I எனும் எழுத்து வாக்கியத்தில் எங்கு இடம்பெற்றாலும் அது பெரிய எழுத்தாகவே (Capital Letter) எழுதப்படல் வேண்டும்.


ஒரு பெயர்ச்சொல்லானது உரித்தான பெயர்சொல் (proper noun) எனக் காட்டுதல்:

உரித்தான ஓர் பெயர்சொல் ஒரு வாக்கியத்தில் எங்கு இடம்பெற்றாலும் அல்லது தனிச் சொல்லாக எழுதப்பட்டாலோ அச்சொல்லின் முதல் எழுத்து பெரிய எழுத்தாகவே (Capital Letter) எழுதப்படல் வேண்டும்.

He went to India - இங்கே 'India' எனும் சொல் ஓர் உரித்தான பெயர்சொல் ஆகும்.


உரித்தான பெயர்ச்சொற்களுக்கான (proper noun) சில உதாரணங்கள்:

1. ஒவ்வொரு தனி மனிதனின் பெயரும் உரித்தான பெயர்சொல் ஆகும்.
உதாரணம்: Thomas Alva Edison, Barack Hussein Obama, Albert Einstein.

2. நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகளின் பெயர்கள்.
உதாரணம்: Samsung, Toyota, Airtel, The New York Times, The Times of India.

3. நாடுகள், மாவட்டங்கள், நகரங்கள், ஊர்கள், மொழிகள்.
உதாரணம்: India, Sri Lanka, Tamil Nadu, Western Province, Chennai, Colombo, London, Sydney. மொழிகள் - English, Tamil, Hindi, Sinhalese, French, German, Spanish. 

4. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், முக்கிய கட்டிடங்கள் மற்றும் ஓர் அறையின் பெயர்:
உதாரணம்: Taj Mahal, the Eiffel Tower, Room 145. வரலாற்று நிகழ்வுகள் - World War I 

5. மாதங்கள், கிழமைகள், நாட்கள், விடுமுறை தினங்கள், முக்கிய நாட்கள்.
உதாரணம்: January, Monday, Deepavali, Ramadan, Christmas, Mother's Day. 

6. மதங்கள் மற்றும் மத நூல்கள்
உதாரணம்: Hinduism, Islam, Christianity, Buddhism, Bible, Quran, Rigveda.


YouTube Video: Lesson 1 - ஆங்கில எழுத்துக்கள் (The English Alphabet)



குறியீடுகள்:


கடந்த சில மாதங்களாக முகநூல் மற்றும் மின்அஞ்சல் வழியே ஆங்கிலம் கற்க பலரும் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து எம்மால் மேற்கொள்ளப்பட்ட ஓர் முயற்சியே 'ஆங்கிலம் கற்போம்' எனும் இத்தொடர். 
இத்தொடரின் மூலம் இலகு வழியில் ஆங்கிலத்தை வாசகர்களுக்கு கற்பிப்பதே எமது முக்கிய குறிக்கோளாகவுள்ளது.
இத்தொடர் மற்றும் பாடங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள Comment Section இல் நீங்கள் பதிவிடலாம். 

-Copyright-
All rights reserved by manavarulagam.net | No part of this article may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher. For permission requests, write to the publisher at manavarulagm@gmail.com or contact via facebook/manavarulagam
أحدث أقدم