IQ Test 2 : சரியான விடை என்ன?


ஒரு வெற்று கண்ணாடிப் பெட்டியினுள்:

- முதல் நாள் 1 சிகப்பு நிற பந்து இடப்படுகிறது.
- இரண்டாவது நாள் 2  சிகப்பு நிற பந்துகள் இடப்படுகின்றன.
- மூன்றாவது நாள் 4 சிகப்பு நிற பந்துகள் இடப்படுகின்றன.
- நான்காவது நாள் 8  சிகப்பு நிற பந்துகள் இடப்படுகின்றன.

இவ்வாறு இடப்படும் பந்துகளின் எண்ணிக்கை 1, 2, 4, 8, 16, 32 என ஒவ்வொரு நாளும் இரு மடங்காக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 

இப்பந்துகள் அனைத்தும் (நிறம், நிறை, விட்டம்) சமனானவை.

கேள்வி:
50வது நாள் இக்கண்ணாடிப் பெட்டி முற்றாக நிரம்பிவிடுகிறது எனின் எத்தனை நாட்களில் இக்கண்ணாடிப் பெட்டி அரைவாசியாக நிரம்பியிருக்கும்?


இக்கேள்விக்கு பதிலளிக்க நீங்கள் கணிப்பானையோ அல்லது பேனை, கடதாசி என எந்த உபகாரணத்தையும் உபயோகிக்கவேண்டிய தேவை இல்லை. நீங்கள் சற்று வித்தியாசமாக சிந்தித்தலே போதுமானது.

உங்கள் விடையினை கீழே குறிப்பிடுங்கள். (சரியான விடை சற்று நேரத்தில் பதிவிடப்படும்).



இதோபோன்ற கேள்விகளே, போட்டிப் பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான பரீட்சைகளில் அதிகம் கேற்கப்படுகின்றன. 
أحدث أقدم