இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையின் III ஆம் தர உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2019 (I)


இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையின் III ஆம் தர உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2019 (I)

Efficiency Bar Examination for the Officers in Grade III of Sri Lanka Teacher Educators’ Service 2019 (I)

பரீட்சையின் மொழிமூலம்

இந்தப் பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலம் நடைபெறும். விண்ணப்பிக்கும் மொழி மூலத்தை பிறகு மாற்றியமைக்க இடமளிக்கப்படமாட்டாது.

போட்டிப் பரீட்சை மூலமாக அரசாங்க சேவைக்குப் பிரவேசித்த பரீட்சாத்தியாக இருப்பின் இந்த பரீட்சையின் மொழி மூலமான போட்டிப் பரீட்சையில் தோற்றிய மொழி மூலமும், போட்டிப் பரீட்சையின்றி அரசாங்க சேவையில் பிரவேசித்த பரீட்சாத்தியாக இருப்பின்,  அப்பரீட்சையின் மொழி மூலமான அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தகைமைப் பெற்ற பரீட்சைக்குத் தோற்றிய மொழிமூலத்தையும் தெரிவுசெய்ய வேண்டும்.

பரீட்சாத்தி தமக்குரியதல்லாத மொழிமூலமாக பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக தெரியவரும் பட்சத்தில் அவரது பரீட்சாத்தி அந்தஸ்து இரத்துச் செய்யப்படும்.
இந்தப் பரீட்சை, பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் கொழும்பில் நடாத்தப்படுவதுடன் பரீட்சையை நடாத்துவது தொடர்பாக அவரினால் விதிக்கப்பட்டுள்ள சட்ட ஒழுங்குகளை பின்பற்றுவதற்கு பரீட்சாத்தி கட்டுப்பட்டுள்ளார்.

முழு விபரம்:


Source - Government Gazette (2019.02.22)
Previous Post Next Post