க.பொ.த உயர்தரப் பரீட்சை - 2019 : தனியார் பரீட்சாத்திகளுக்கான விண்ணப்பப் படிவம்


இம்முறை பரீட்சையானது புதிய பாடத்திட்டம், பழைய பாடத்திட்டம் என இரு பரீட்சைகளாக நடைபெறும்.

விண்ணப்பப்படிவங்களைப் பூரணப்படுத்தும்போது தான் தோற்றும் பாடத்திட்டம் எதுவெனச் சரியாக இனங்கண்டு, அதற்கேற்ப விண்ணப்பப்படிவங்களைப் பூரணப்படுத்த வேண்டும்.

பாடசாலையில் இருந்து பாடசாலை விடுகைப்பத்திரத்தைப் பெற்றவர்கள் மட்டுமே தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக தோற்ற முடியும். பாடசாலையில் கற்றுக்கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தோற்றினார் என அறியப்படுமிடத்து பரீட்சைப் பெறுபேற்றை இரத்து செய்து எதிர்வரும் காலங்களில் பரீட்சைகளுக்குத் தோற்றத் தடை விதிக்கப்படும்.

எக்காரணத்துக்காகவேனும் பரீட்சை நிலையமோ, விண்ணப்பித்த பாடமோ, மொழி மூலமோ பின்னர் மாற்றப்படமாட்டாது என்பதால் உமது விண்ணப்பப்படிவத்தை எப்பிழையுமின்றி பூரணப்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது நிரந்தர வதிவிட முகவரியை குறிப்பிட வேண்டுமென்பதுடன் தாம் கல்விகற்ற தனியார், சர்வதேச பாடசாலைகளின் பெயர், முகவரியை எழுதலாகாது. அவர்கள் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிடல் வேண்டும்.


இப்பரீட்சைக்கு விண்ணப்பித்து எந்த ஒரு வினாப்பத்திரத்திற்கும் அல்லது ஒரு வினாப்பத்திரத்தின் ஒரு பகுதிக்கும் தோற்றாத பரீட்சார்த்திகள் மட்டும்இ பரீட்சைக்குத் தோற்றாத பரீட்சார்த்திகளாகக் கருதப்படுவார்கள். அத்தகைய பரீட்சார்த்திகளின் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான பரீட்சை எத்தனம் (Attempt) செல்லுபடியற்றதாகிவிடாது. அப்பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றாமையை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய அத்தாட்சிப் பத்திரம் தேவைப்படமாட்டாது. இவர்கள் தமது அனுமதி அட்டையைப் பாதுகாப்பாக வைத்திருப்பதே எந்த ஒரு பாடத்திற்கும் பரீட்சார்த்தி தோற்றவில்லை என்பதனை நிரூபிப்பதற்கான ஒரே ஆதாரமாகும்.

இப்பரீட்சை மூலம் புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கேற்ப மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவூ செய்யூம் முறை தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பின்னர் அறிவிக்கப்படும்.

Source - www.doenets.lk

Download Application Form - விண்ணப்பப் படிவத்தை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்

பரீட்சை நிலையங்கள் நிறுவப்படும் நகரங்கள் - இங்கே அழுத்தவும்
أحدث أقدم