பதவி வெற்றிடங்கள் : கல்விமானி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளல் - கல்வி அமைச்சு.


நாட்டின் தேசிய பாடசாலைகளில் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர் ஆலோசனைச் செயற்பாட்டுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2-II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2019

Recruitment of Graduates in Education to Class 2 Grade II of Sri Lanka Teachers’ Service for the task of school Student counselling in the Sinhala Medium and Tamil Medium of the National and Provincial schools in the Island – 2019

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர் ஆலோசனைச் செயற்பாட்டுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு கல்விமானி பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கீழே அறிவித்தலின் இறுதியில் காணப்படும் மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் 2019.04.12 ஆந் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ “உதவிச் செயலாளர், ஆசிரியர் தாபனக்கிளை கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்லை" என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.

விண்ணப்பங்கள் அடங்கிய கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர் ஆலோசனைச் செயற்பாட்டுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையின் 2-II ஆம் தரத்திற்கான ஆட்சேர்ப்பு - 2019" எனக் கட்டாயமாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.

சம்பள அளவு: 71,650/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 ஏப்ரல் 12

Click - பொது அறிவு சவால் | GK Challenge

முழு விபரம்:Source - Government Gazette (2019.03.15)
Previous Post Next Post