2020 முழுவதும் நீங்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விடயம்!


புதுவருடத்தின் தொடக்கத்துடன் அனைவரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துடன் இருப்பீர்கள். அதிலும் 2020 என்பது இன்னும் ஓர் விஷேடமான வருடம் என்பதால் இவ்வருடத்தை பலரும் ஆரவாரமாக வரவேற்கிறோம்.

வீடுகள், வியாபார நிலையங்கள், மற்றும் நீங்கள் வேலைசெய்யும் நிறுவங்கள் என எல்லா இடத்திலும் இதற்காக விஷேட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

எனினும் புதுவருடத்தின் தொடக்கத்துடன் இன்றிலிருந்தே நீங்கள் கடைபிடிக்க வேண்டிய ஓர் மிக முக்கியமான விடயம் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

2020 ஆம் ஆண்டு முடியும் வரை நீங்கள் திகதியினை எழுதும் போது அல்லது குறிப்பிடும் போது கட்டாயம் திகதியில் வருடத்தினை முழுமையாக குறிப்பிடுங்கள்.

உதாரணமாக, இன்றைய திகதியை எழுதும் போது,
01/01/2020 
என வருடத்தை முழுமையாக எழுதுங்கள்.

காரணம், சிலர் இதனை சுருக்கமாக,
01/01/20 
அல்லது
1/1/20 
என எழுதுவதுண்டு. இவ்வாறு சுருக்கமாக எழுதும் போது யார் வேண்டுமானாலும் திகதியின் வருடத்தை இலகுவாக மாற்றிவிடலாம்.

அதாவது, 01/01/20 என்பதை,

01/01/2000,
01/01/2005,
01/01/2010,
01/01/2015,
01/01/2018,
01/01/2019

என பல வடிவங்களில் மாற்றி எழுதலாம். இதனை தவிர்க்க, முடியுமான வரை திகதியில் வருடத்தை முழுமையாக குறிப்பிடுங்கள்.

முக்கியமாக, வியாபார நடவடிக்கைகள், காசோலைகள் மற்றும் வங்கிக் கொடுக்கல் வாங்கல்களின் போது இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு ஓர் முக்கிய ஆவணத்தின் திகதியினை யாரவது தவறாக மாற்றிவிட்டால், பின்னொரு காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வழக்குகளின் தீர்ப்புகள் கூட மாறியாமையலாம், ஏன் ஒருவரின் தலையெழுத்து கூட மாறிவிடும்.

இதே போன்று சென்ற வருடமும் 01/01/19 என எழுதும் போது அதை 1970, 1980, 1990, 1995, 1999 என்றெல்லாம் எழுத முடிந்தது. ஆனால் அது 20 வருடங்களுக்கு அப்பாற்பட்ட பின்னோக்கிய வித்தியாசமாக உள்ள அதேவேளை, 01/01/20 என எழுதும் போது, 1-2 வருடங்கள் தொடக்கம் 20 வருடங்கள் வரை பின்னோக்கியும், 1-2 வருடங்கள் தொடக்கம் 79 வருடங்கள் வரை முன்னோக்கியும் மாற்றி எழுத முடிகிறது.

இது ஒரு முக்கிய விடயம் என்பதால், இதனை பகிர்ந்து, கட்டாயம் உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.
أحدث أقدم