அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 09 | English Words in Tamil


ஆங்கிலம் கற்க, ஆங்கிலத்தில் மேலும் நன்றாக கதைக்க, வாசிக்க மற்றும் எழுத ஆர்வமுடையவர்கள் புதிய ஆங்கில சொற்களை (English Vocabulary) முடியுமானவரை தெரிந்துவைத்திருப்பதன் முக்கியத்துவத்தை சென்ற பதிவுகளில் தெளிவுபடுத்தி இருந்தோம்.

நாள்தோறும் குறைந்தது 2 தொடக்கம் 10 புதிய ஆங்கில சொற்களையேனும் கற்று வந்தால், காலப்போக்கில் ஆங்கிலத்தில் மேலும் விரிவாக எழுத, கதைக்க மற்றும் வாசிக்க முடியும்.

இங்கே அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் பேசும் போதும், எழுதும் போதும், வாசிக்கும் போதும் பயன்படும் வீட்டு உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் பற்றிய சில அடிப்படை ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.

Vocabulary - Household Items  (Part 01)
வீட்டு உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் - பகுதி 01


 1. candle - மெழுகுவர்த்தி
 2. calendar - நாட்காட்டி
 3. bucket - வாளி
 4. tooth brush - பல் தூரிகை
 5. brush - தூரிகை
 6. broomstick - தும்புத்தடி
 7. broom - துடைப்பம்
 8. wall clock - சுவர் கடிகாரம்
 9. comb - சீப்பு
 10. fridge - குளிர்சாதன பெட்டி
 11. light bulb - ஒளி விளக்கு
 12. fan - மின்விசிறி
 13. bathtub - குளியல் தொட்டி
 14. bed - கட்டில்
 15. blanket - போர்வை
 16. book shelf - புத்தக அலமாரி
 17. ceiling - உட்கூரை
 18. chair - கதிரை
 19. desk - மேசை
 20. furniture - தளபாடம்
Previous Post Next Post