Countable Nouns and Uncountable Nouns - கணக்கிட முடியுமான மற்றும் கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் | Lesson 07


Countable Nouns
கணக்கிட முடியுமான பெயர்ச்சொற்கள்

உங்களால் எண்ணி கணக்கிட முடியுமான பெயர்ச்சொற்கள் Countable Nouns - கணக்கிட முடியுமான பெயர்ச்சொற்கள் எனப்படுகின்றன.

உதாரணமாக:

01. Cat - பூனை என்பதை

one cat - ஒரு பூனை,
two cats - இரண்டு பூனைகள்
three cats - மூன்று பூனைகள்
ten cats - பத்து பூனைகள்

என எணிக்கையை பொருத்து எம்மால் கணக்கிட முடியும்.

02. Bed  - கட்டில் என்பதை

one bed - ஒரு கட்டில்.
two beds - இரண்டு கட்டில்கள்
four beds - நான்கு கட்டில்கள்
five beds - ஐந்து கட்டில்கள்

என உங்கள் வீட்டில் உள்ள கட்டில்களை எணிக்கையை பொருத்து உங்களால் கணக்கிட முடியும்.

03. Banana  - வாழைப்பழம் என்பதை

one banana - ஒரு வாழைப்பழம்
two bananas - இரண்டு வாழைப்பழங்கள்
ten bananas - பத்து வாழைப்பழங்கள்
twenty bananas - இருபது வாழைப்பழங்கள்
hundred bananas - நூறு வாழைப்பழங்கள்

என உங்களால் எண்ணிக்கையில் கணக்கிட முடியும்.

இவ்வாறு உங்களால் எண்ணி கணக்கிட முடியுமான பெயர்ச்சொற்கள் அனைத்தும் Countable Nouns - கணக்கிட முடியுமான பெயர்ச்சொற்கள் எனப்படுகின்றன.


Uncountable Nouns
கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள்

உங்களால் எண்ணிக்கையில் எண்ணி கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் Uncountable Nouns - கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் எனப்படுகின்றன.

உதாரணமாக:

01. Milk - பால் என்பதை Milks - பால்கள் என எழுதுவதில்லை, பேசுவதுமில்லை. 

02. Blood - குருதி என்பதை Bloods - குருதிகள் என எழுதுவதில்லை, பேசுவதுமில்லை. 

03. Water - தண்ணீர் என்பதை Waters - தண்ணீர்கள் என எழுதுவதில்லை, பேசுவதுமில்லை. 

04. Salt - உப்பு என்பதை Salts - உப்புகள் என எழுதுவதில்லை, பேசுவதுமில்லை.

இதே போன்று,

air - வளி
education - கல்வி
flour - மாவு
music - இசை
oxygen - ஒக்ஸிஜன்
rain - மழை
rice - அரிசி
sand - மணல்
sugar - சீனி

மற்றும் இது போன்ற கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் பல உள்ளன.

இவ்வாறு உங்களால் எண்ணிக்கையில் எண்ணி கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் Uncountable Nouns - கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் எனப்படுகின்றன.

தொடர்பான பகுதி: Nouns - பெயர்ச்சொற்கள்
Previous Post Next Post