மார்ச் 20 தொடக்கம் 27 வரை அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றுமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது..
நாளை மார்ச் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலப்பகுதியாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது அரச மற்றும் தனியார் துறைகளுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதை நடைமுறைப்படுத்துவது பற்றிய மேலதிக விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source - Adaderana