'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கவுள்ளோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம்.
கீழே உள்ள வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.
இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.
Can you speak English?
உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடியுமா?
Yes, I can speak English.
ஆம், என்னால் ஆங்கிலத்தில் கதைக்க முடியும்.
No, I can’t speak English.
இல்லை, என்னால் ஆங்கிலத்தில் கதைக்க முடியாது.
Does it rain there?
அங்கு மழை பெய்கிறதா?
Yes, it is raining here.
ஆம், இங்கு மழை பெய்கிறது.
No, it is not raining here.
இல்லை, இங்கு மழை பெய்வதில்லை.
Shall we play football?
நாங்கள் கால்பந்து விளையாடுவோமா?
OK, let’s play football.
சரி, கால்பந்து விளையாடுவோம்.
No, let’s play cricket.
இல்லை, கிரிக்கெட் விளையாடுவோம்.
Is this your house?
இது உங்களுடைய வீடா?
Yes, this is my house.
ஆம், இது என்னுடைய வீடு.
No, this is not my house.
இல்லை, இது என்னுடைய வீடல்ல.