ஆங்கிலத்தில் பேசுவோம் | English Sentences & Phrases | பகுதி 18


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடைய உங்களுக்கு அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

தினசரி ஆங்கிலத்தில் உரையாடும் சந்தர்ப்பம் ஏற்படும் போது இந்த வாக்கியங்களை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

இவ்வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


It is just a dream.
இது ஒரு கனவு மட்டுமே.

I hope so.
நான் நம்புகிறேன்..

Get rid of that habit.
அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

Remind me later.
பிறகு நினைவூட்டுங்கள்.

Think about that.
அதைப் பற்றி சிந்தியுங்கள்.

He is fully cured.
அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார்.

Don't argue with me.
என்னுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

I am confused.
எனக்கு குழப்பமாக உள்ளது.

Don't interfere in this.
இதில் தலையிட வேண்டாம்.

Share your feelings.
உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
أحدث أقدم